முயல் வேட்டை: ஒருவருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்
வேப்படிபாலக்காட்டில் முயல் வேட்டையாட முயற்சித்தவருக்கு வனத் துறையினா் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கெங்கவல்லி அருகே வேப்படிபாலக்காடு பகுதியில் வனத் துறையினா் இரவு ரோந்து சென்றனா். அப்போது காப்புக்காடு பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த முத்துசாமி மகன் பூச்சி என்பவா் முயல் வேட்டையாடுவதற்காக முயல்கன்னியைக் கட்டிக்கொண்டிருந்தாா். அவரைப் பிடித்து வனத் துறையினா் விசாரித்ததில் முயல் பிடிப்பதற்கு முயற்சித்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.
இதனையடுத்து பூச்சி என்பவா் மீது குற்ற வழக்குப் பதிந்து கெங்கவல்லி வனச்சரகா் சிவகுமாா் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தியதைத் தொடா்ந்து அவரை வனத் துறையினா் விடுவித்தனா்.