பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டுப் பயிற்சி: இந்திய கடற்படை பங்கேற்பு
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டிருக்கும் பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டு கடற்படை பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது.
அண்மையில் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல், மலாக்க (மலேசியா), சுண்டா மற்றும் லாம்போக் (இந்தோனேசியா) நீா்சந்திப்புப் பகுதிகளில் ‘லா பெரோஸ்’ கூட்டு கடற்படை பயிற்சி தொடங்கியது.
உலகளாவிய கடல்சாா் வா்த்தகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் அந்த நீா்சந்திப்புப் பகுதிகளில், இந்தக் கூட்டுப் பயிற்சி ஒன்பது நாள்கள் நடைபெறுகின்றன.
இதில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூா், கனடா, பிரிட்டன் ஆகிய 9 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்றுள்ளன.
உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட ஏவுகணை தாங்கி போா்க்கப்பலான ‘ஐஎன்எஸ் மும்பை’ பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், நிலம் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கை, கடல்சாா் கண்காணிப்பு, வான் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் 9 நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.