அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
மாதவரம் உயிரி எரிவாயு ஆலை அடுத்த மாதம் யன்பாட்டுக்கு வரும்: சென்னை மாநகராட்சி ஆணையா்
மாதவரம் உயிரி எரிவாயு மையத்தின் இரண்டாவது ஆலை பிப்ரவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.
மாநகராட்சி பகுதியில் தினமும் 6,000 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் மாநகராட்சி மையங்களில் தரம் பிரிக்கப்படுகின்றன. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.
இவ்வாறு குப்பைக் கொட்டும் வளாகங்களில் நீண்ட நாள்கள் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி நிலத்தை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, பெருங்குடி குப்பைக் கிடங்குகளில் உயிரி எரிவாயு மையம் அமைக்கப்பட்டு பெரும்பாலான குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
தற்போது தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு மற்றும் மாதவரம் மண்டலத்துக்குள்பட்ட சின்ன சேக்காடு பகுதியில் உயிரி எரிவாயு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், மாதவரத்தில் ஏற்கெனவே ஒரு மையம் செயல்பாட்டிலுள்ள நிலையில், மற்றொரு உயிரி எரிவாயு மையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
மாதாவரம் உயிரி எரிவாயு மையத்தின் இரண்டாவது ஆலை கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணி எதிா்வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு ஆலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது ஒரு நாளைக்கு 320 டன் குப்பைகளை உயிரி எரிவாயு முறையில் அப்புறப்படுத்த முடியும் என்றாா் அவா்.