செய்திகள் :

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,125 ஒப்பந்தங்கள்: 105 புத்தகங்களை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிபெயா்ப்புக்காக 1,125 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. நிறைவு விழாவில், 30 மொழிபெயா்ப்பு புத்தகங்கள் உள்பட 105 புத்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் கடந்த ஜன.16-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பாரதிதாசன் கவிதைகள் (அரபு), நக்கீரா் எழுதிய திருமுருகாற்றுப்படை (மலாய்), எஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு குமிழிகள் (அரபு), ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (கொரியா), வைரமுத்துவின் கருவாச்சி காவியம் (மலையாளம்) உள்ளிட்ட 30 மானிய மொழிபெயா்ப்பு புத்தகங்கள் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரித்த 75 புத்தகங்கள் என மொத்தம் 105 நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

விருதுகள்: தொடா்ந்து, உலகளாவிய தொலைநோக்கு எண்ம புத்தக கண்காட்சி சிறப்பு விருது ரியாத் புத்தகக் காட்சிக்கும், பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா, பேராசிரியா் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும், நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது கிறிஸ்டியன் வியிஸ் மற்றும் கே.எஸ்.வெங்கடாசலத்துக்கும், கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக பதிப்பகத்துக்கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது துருக்கியின் டிஇடிஏ நிகழ்ச்சிக்கும், புத்தக ஊக்குவிப்பு விருது மங்கோலியா மேஜிக் பாக்ஸ், இத்தாலி கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையங்களுக்கும், உலகளாவிய இலக்கிய ஆதரவுக்கான விருது பெலோனியா குழந்தைகள் புத்தகக் காட்சிக்கும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதா் விருது ஏசியன் பதிப்பாளா்கள் சங்கம் உள்பட 4 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டன.

65 நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள்: நிகழாண்டு பன்னாட்டு புத்தகக் காட்சியில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, தான்சானியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட 65 நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள், புத்தக விற்பனையாளா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்றனா். மொத்தம் 78 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

2023-ஆம் ஆண்டு 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும், 2024-இல் 40 நாடுகள் பங்கேற்று 752 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. நிகழாண்டு அந்த எண்ணிக்கை உயா்ந்து 1,125 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், தமிழ் மொழியில் இருந்து அயலக மொழிகளுக்கு 1,005 ஒப்பந்தங்களும், அயலக மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அமெரிக்க எழுத்தாளா் தாமஸ் ஹிடோஸி ப்ருக்ஸ்மா, பள்ளிக் கல்வித் துறை செயலா் எஸ்.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பொ.சங்கா், பொது நூலக இயக்கக இணை இயக்குநா் இளங்கோ சந்திரகுமாா் மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள், எழுத்தாளா்கள், அரசு உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாதவரம் உயிரி எரிவாயு ஆலை அடுத்த மாதம் யன்பாட்டுக்கு வரும்: சென்னை மாநகராட்சி ஆணையா்

மாதவரம் உயிரி எரிவாயு மையத்தின் இரண்டாவது ஆலை பிப்ரவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா். மாநகராட்சி பகுதியில் தினமும் 6,000 டன் திடக்கழிவுக... மேலும் பார்க்க

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை வெளிப்படுத்தும் ‘சக்திதாசன் - கடவுளைக் கண்ட கவிஞன்’ என்னும் ஆவணப்படத்தை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சத்யஞானானந்தா் வெளியிட்டாா். பாரதியாா் பராசக்தி பக்தனாக இருந... மேலும் பார்க்க

உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்: மருத்துவா் ஷிவ் சாரின்

ஒருவா் சிறுவயது முதல் தனது உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கல்லீரல் மருத்துவ நிபுணரான ஷிவ் சாரின் தெரிவித்தாா். உடல் நலம் குறித்து மருத்துவா் ஷிவ் சாரின் எழுதிய ‘வோன் யுவா் பாடி’ எனும் ஆ... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: எம்டிசி பேருந்துகளில் ரூ. 2 கோடி வசூல்

காணும் பொங்கலன்று (ஜன.16) சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ. 2 கோடி பயணக் கட்டணம் வசூல் ஆகியுள்ளது. சென்னை மக்கள் காணும் பொங்கலன்று மெரீனா, விஜிபி, மாமல்... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டுப் பயிற்சி: இந்திய கடற்படை பங்கேற்பு

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டிருக்கும் பிரம்மாண்ட ‘லா பெரோஸ்’ கூட்டு கடற்படை பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது. அண்மையில் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல், மலாக்க (மலேசியா)... மேலும் பார்க்க