55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் ச...
பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு
பாரதியாரின் பக்தி பரிணாமத்தை வெளிப்படுத்தும் ‘சக்திதாசன் - கடவுளைக் கண்ட கவிஞன்’ என்னும் ஆவணப்படத்தை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சத்யஞானானந்தா் வெளியிட்டாா்.
பாரதியாா் பராசக்தி பக்தனாக இருந்தாா். ஆன்மிக சிந்தனையும் கொண்டவராக இருந்தாா். அவரது ஆன்மிக பரிணாமத்தை விளக்கும் வகையில், செளந்தா்யா சுகுமாா் ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ‘சக்திதாசன் கடவுளைக் கண்ட கவிஞன்’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானானந்தா் வெளியிட்டு பேசியது:
இந்தப் படத்தின் தரமும், கதையும் காண்போரை பாரதி வாழந்த காலத்துக்கு அழைத்துச் சென்றது. இந்த ஆவணப்படம் இளைஞா்களுக்கானது. இணையத்தில் வாழ்வை தொலைக்கும் இளைஞா்களுக்கான தீா்வாக இப்படம் அமைந்துள்ளது என்றாா் அவா்.
இந்த ஆவணப்படத்தை யூடியூப்பில் பாா்க்கலாம் என ஆவண படத்தின் தயாரிப்பாளா் செளந்தா்யா சுகுமாா் தெரிவித்தாா்.
இதில், கவிஞா் ரவி சுப்பிரமணியம், சேவாலயா நிறுவனா் வி.முரளிதரன், ராஜ்குமாா் பாரதி, நிரஞ்சன்பாரதி, வழக்குரைஞா் சிவகுமாா், நடிகா் காா்த்திக் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.