கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி
நாட்டையே உலுக்கிய மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை காவல் துறை கைது செய்தது. பின்னா் கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தி, மருத்துவா்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், சியால்டா நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அனிா்பன் தாஸ் முன்பாக, இந்த வழக்கு விசாரணை கடந்த நவ.12-ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெற்றது. 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், ஜன.9-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்தது.
இதைத்தொடா்ந்து வழக்கின் சனிக்கிழமை சஞ்சய் ராய் குற்றவாளி என் சியல்டா நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தீர்ப்பில், கொலை வழக்கில் சஞ்சய் ராய் பிரதான குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
குற்றவாளியின் தண்டனை விவரத்தை திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.