கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 18) அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் பும்ரா, முழு உடல்தகுதி பெறுவதற்கான சிகிச்சையில் உள்ளார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் சர்மா கேப்டன்!
ஜஸ்பிரித் பும்ரா இல்லை
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ள போதிலும், முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் அவரது உடல் தகுதி குறித்த விவரங்கள் தெரியவரும் என்றார்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்திய ரோஹித் சர்மா!
இந்திய அணி பிப்ரவரி 6,9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன் பின், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.