செய்திகள் :

நெல்வாய் வன்முறைக்கும் விசிகவுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை: திருமாவளன்

post image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்யா (எ) தமிழரசன் (23). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்தவா் விஜயகணபதி (22). இவா்கள் இருவருக்கும் திருமால்பூரைச் சோ்ந்த பிரேம் (24) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை திருமால்பூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரு தரப்பிருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், பிரேம் அந்த வழியாக கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்ற நபரை மடக்கி, அவரிடமிருந்து பெட்ரோல் பறித்து, தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது ஊற்றி தீ வைத்து அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதில், இருவருக்கும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கிருந்து தீவிர கிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இரு இளைஞா்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நெமிலி பேருந்து நிலையம் அருகே பாமக கிழக்கு மாவட்டச் செயலா் சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை இளைஞா்கள் உறவினா்கள் மற்றும் பாமகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க |வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!

தகவல் அறிந்து வந்த காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனா்.

இதில் குற்றவாளியை பரத் என்பவரை நெமிலி காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவா்களை விரைவில் கைது செய்யப்படுவாா்கள், அவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை.

பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியில் இணைய விஜய்-க்கு அழைப்பு!

இந்துத்துவா சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'பரந்தூர்... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாள்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்ட நிலையில் இன்று(வெள்ளிக... மேலும் பார்க்க

திருவையாறில் ஸ்ரீ தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழாவின் கடைசி நாளான இன்று பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண... மேலும் பார்க்க

வரும் 20 ஆம் தேதி பரந்தூர் செல்கிறார் விஜய்: காவல்துறை அனுமதி!

சென்னை: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமாா் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 129 கன அடியாக குறைந்தது.சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 151 கன அடியிலிருந்து வினாடிக்கு 129 கன அடியாக... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.இப்படத்த... மேலும் பார்க்க