செய்திகள் :

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா?: காலியிடங்கள் 151

post image

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் (காப்பக நிபுணர்)பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trade Finance Officer (MMGS-II)

காலியிடங்கள்: 150

சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்திருப்பதுடன் ஐஐபிஎப் வழங்கும் Forex சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பணி: Deputy Manager (Archivist) - 1

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் நவீன இந்திய வரலாற்றில் சிறப்புப் பாடத்துடன் வரலாற்றில் முதுகலை பட்டம் (கி.பி. 1750-க்கு பிந்தைய காலம்) பெற்றிருக்க வேண்டும். காப்பக மேலாண்மை, பொதுப் பதிவு மேலாண்மை, பாதுகாப்பு, மறுபதிவு, தனியார் ஆவணக் காப்பகம், வணிக ஆவணக் காப்பகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960

வயதுவரம்பு: 31.12.2024 தேதியின்படி 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா?தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.bank.sbi/careers அல்லது https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கேகிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1036 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் பிப்ரவரி 6 ஆம் தேதிக்... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-வில் ஜேஆர்எப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(டிஆர்டிஓ)கீழ் செயல்பட்டு வரும் உயிரி ஆற்றல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கழகத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி

கொல்கத்தா மெட்ரோ கழகத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ண... மேலும் பார்க்க

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் நிறுவனம்(நால்கோ) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 செவிலியர் பணிக்கு ஓப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேத... மேலும் பார்க்க