செய்திகள் :

திருப்பதி அருகே திரையரங்கில் பலியிடப்பட்ட ஆடு! பிரபல நடிகரின் ரசிகர்கள் கைது!

post image

டாகு மகாராஜ் வெளியீட்டின்போது, திரையரங்குக்கு வெளியே ஆட்டை பலிகொடுத்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதியில் வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டின்போது, திருப்பதி, டாடா நகரில் உள்ள பிரதாப் திரையரங்கின் வெளியே உயிருள்ள ஆட்டை, பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பலிகொடுத்து கொண்டாடினர். இந்த சம்பவத்தை விடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பினர்.

இந்த நிலையில், பொது இடத்தில் ஆடு கொல்லப்பட்டதை அறிந்த பீட்டா அமைப்பு, இதுகுறித்து புகார் அளித்தது. இதனையடுத்து, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இறைச்சிக் கடைகள்தவிர, பொது இடங்களில் விலங்குகள் கொல்லப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோயில்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விலங்குகளை மத ரீதியாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ பலியிடுவதைத் தடைசெய்யும் குறிப்பிட்ட சட்டங்கள் உள்ளன.

கடந்தாண்டு செப்டம்பரில் வெளியான நடிகரி பாலகிருஷ்ணாவின் மருமகன் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா: பகுதி 1 படத்தின் வெளியீட்டின்போதும், இதுபோன்ற சம்பவம் தொடர்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இதையும் படிக்க:ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. இலவச மின்சாரம், குடிநீர்.. வாடகைதாரர்களுக்கும்!

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவின் உள்கட்சித் தேர்தல் ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் திட்டங்களை நகலெடுக்கும் பாஜக: பிரியங்கா கக்கர்

தில்லி தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் குற்றம் சாட்டியுள்ளார்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தலைநகர் தில்லியில... மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. இலவச மின்சாரம், குடிநீர்.. வாடகைதாரர்களுக்கும்!

தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழ... மேலும் பார்க்க

கும்பமேளா கருத்தரங்கிலிருந்து விலகிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ்!

விஎச்பி மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், கும்பமேளா கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ட... மேலும் பார்க்க

பாட்னாவில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை பாட்னா வந்துள்ளார். பிகாரில் காங்கிரஸ் பிரிவு தலைவர்களுடன் உரையாட உள்ளார். இதையடுத்து 'அரசியலமைப்பைப் பாதுகாப்பது' எ... மேலும் பார்க்க