ரஞ்சி போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா; விலகிய விராட் கோலி!
2025-26ல் புதிதாக 12,000 பேருக்கு வேலை: விப்ரோ அறிவிப்பு
2025-26 நிதியாண்டில் புதிதாக 12,000 பேரை பணியில் சேர்க்கவிருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான விப்ரோ வரும் ஆண்டில் 10,000-க்கும் அதிகமான புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சவுரப் கௌவில் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் மூலம் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை 10,000- 12,000 என்ற அளவில் இருக்கும். நடப்பு நிதியாண்டின் 3 காலாண்டிலும் புதிதாக 7,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4-வது காலாண்டில் மேலும் 2,500 -3,000 பேர் பணியமர்த்தப்படுவர்.
இதையும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி
மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனம் 24.5% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அடுத்த காலாண்டில் கூடுதல் வருவாயை எதிர்பார்ப்பதாகவும் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் சுமார் 20,000 பேரை புதிதாக பணியமர்த்தவிருக்கிறது.
இதையும் படிக்க | டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!