செய்திகள் :

சென்னையில் கூடுதல் புறநகர் ரயில் சேவை

post image

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தாம்பரம்-காட்டாங்குளத்தூர் இடையே இயக்கப்படும் என்றும் அதுவும் 12 பெட்டிகளுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் மக்கள் மீண்டும் சென்னையை நோக்கி திரும்பி வருகின்றனர்.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ளக்கிழமை இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் ஊர்ந்தபடியே வாகனங்கள் நகர்ந்து சென்றன.

இந்த நிலையில் சனி, மற்றும் ஞாயிறு கிழமைகளில் இச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் மாற்றுவழிகளை கையாள்வது சிறந்ததாகும்.

ஜன. 25-இல் வீரவணக்க நாள் கூட்டங்கள்: திமுக அறிவிப்பு

மொழிப்போா் தியாகிகளை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஜன. 25-ஆம் தேதி வீரவணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இது குறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எ... மேலும் பார்க்க

அருந்ததியா் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு

அருந்ததியா் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அருந்ததியி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: காவலா்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தலித் இளைஞா் படுகொலை தொடா்பாக காவலா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ப... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் காலம் நீட்டிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இன்றுவரை 1.87(85%) கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது... மேலும் பார்க்க