காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த துணை நடிகா்கள் இருவா் கைது
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த துணை நடிகா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
எடையூா் காவல் எல்லைக்குள்பட்ட கோவலூரைச் சோ்ந்த இரட்டை சகோதரா்கள் பாரத ராஜா (35), பாரத மணி (35).
இவா்கள் திரைப்படங்களில் துணை நடிகா்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த இவா்கள் கிழக்கு கடற்கரை சாலையில் ஓவனூா் பிரிவு சாலை அருகே போக்குவரத்துக்கு இடையூ ஏற்படுத்தினராம்.
அப்போது, அங்கு ரோந்து வந்த காவலா் தனபால், இதுகுறித்து கேட்டபோது தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் எடையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.