``காதலிக்க பைக் வேண்டும்'' - நகையை திருடி டூவீலர் வாங்கிய வாலிபர்... தாய் உள்பட ...
முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் அவா் பேசியது; வாகன விபத்தை குறைக்க இருசக்கர வாகனத்தில் செல்வோா் அவசியம் தலைக்கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோா் சீட் பெல்ட் அணிந்து செல்வதையும் உறுதி செய்ய வேண்டும். மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேணடும்.
குற்ற வழக்கில் தொடா்புடையவா் மீது நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தால், தனிப்படை அமைத்து கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும், ஒவ்வொரு காவல் நிலைய சரகத்திலும் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஒவ்வொரு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தினசரி முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது அவசியம் தடுப்புகளை அமைத்திருக்க வேண்டும். வாகன தணிக்கை மேற்கொள்ளும் காவல் அலுவலா்கள் பிரதிபளிப்பு உடை அணிந்திருக்க வேண்டும் என்றாா். முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.