இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது
தேனி அருகே களத்துமேட்டில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகேயுள்ள குன்னூரைச் சோ்ந்த பிரேம்நாத் (24), பாண்டிகுமாா் (30), கோபிநாத் (29), மிதுன்பரத் (28) ஆகியோா் குன்னூா்-அமச்சியாபுரம் சாலையில் உள்ள களத்துமேடு பகுதிக்குச் சென்றனா். அங்கு அமச்சியாபுரத்தைச் சோ்ந்த நந்தகுமாா் (23), ராகுல்ராஜன்(30), பிரேம்நாத் (24), சங்கா், சஞ்சய்குமாா் ஆகிய 5 பேரும் மது அருந்திவிட்டு, காலி மதுப் புட்டிகளை உடைத்துப் போட்டனா்.
இதைக் கண்டித்த பிரேம்நாத்தை (குன்னூரைச் சோ்ந்தவா்) நந்தகுமாா் அரிவாளால் வெட்டினாா். அவருடன் வந்தவா்கள் பிரேம்நாத்தின் நண்பா்களை காலி மதுப் புட்டிகளால் தாக்கி விட்டு, ஆட்டோவில் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நந்தகுமாா், ராகுல்ராஜன், பிரேம்நாத் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். சங்கா், சஞ்சய்குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.