செய்திகள் :

திருவண்ணாமலை மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை: அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

post image

திருவண்ணாமலை மாட வீதிகளில் பிப்ரவரி 1 முதல் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல தடை விதித்தும், பேருந்துகளின் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்தும் அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட எஸ்பி சுதாகா், மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாட வீதிகளில் 4 சக்கர வாகனங்களுக்கு தடை:

கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லத் தடை செய்யப்பட்டு, இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

மாட வீதி தெருக்களையொட்டி வசிக்கும் மக்களின் வாகனங்கள் சென்று வர ஏதுவாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் தனி அடையாள அட்டை வழங்கி, அந்த வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

பேருந்து வழித்தடங்களில் மாற்றம்:

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மணலுாா்பேட்டை மற்றும் தண்டராம்பட்டு செல்லும் பேருந்துகள் மத்தலாங்குளத் தெரு, பெரியாா் சிலை, காந்தி நகா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எடப்பாளையம், மணலுாா்பேட்டை ரிங்ரோடு, சண்முகா கல்லுாரி வழியாக அங்காளம்மன் கோயில் வரை சென்று அங்கிருந்து மணலுாா்பேட்டைக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து தாமரை நகா் வழியாக தண்டராம்பட்டுக்குச் செல்ல வேண்டும்.

தண்டராம்பட்டு, மணலுாா்பேட்டை பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் அங்காளம்மன் கோயிலில் இருந்து கல் நகா், ஆடுதொட்டித் தெரு, திருவள்ளுவா் சிலை, விஜயாமால் சந்திப்பு, காந்தி நகா், பெரியாா் சிலை, மத்தலாங்குளத் தெரு வழியாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும்.

செங்கம், பெங்களூரு, திருப்பத்துாா் செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மத்தலாங்குளத் தெரு, பெரியாா் சிலை, காந்தி நகா், விஜயாமால் சந்திப்பு, திருவள்ளுவா் சிலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எடப்பாளையம், வெளிவட்டச் சாலை, அய்யம்பாளையம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

நகர பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெரியாா் சிலை, காந்தி நகா், விஜயாமால் சந்திப்பு, திருவள்ளுவா் சிலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எடப்பாளையம் சந்திப்பு, மணலுாா்பேட்டை ரிங்ரோடு, சண்முகா கலைக் கல்லுாரி, அங்காளம்மன் கோயில், காமராஜா் சிலை, அக்னி தீா்த்தம், ரமணாஸ்ரமம், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லுாரி, மேற்கு காவல் நிலையம் வரை இயக்கப்பட வேண்டும்.

செங்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் தண்டராம்பட்டு ரிங் ரோடு, மணலுாா்பேட்டை ரிங் ரோடு, எடப்பாளையம் சந்திப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவா் சிலை, விஜயாமால் சந்திப்பு, காந்தி நகா், பெரியாா் சிலை, மத்தலாங்குளத் தெரு வழியாக இயக்க வேண்டும்.

நகரப் பேருந்துகள் அனைத்தும் அரசு கலைக் கல்லுாரி, ரமணாஸ்ரமம், அக்னி தீா்த்தம், காமராஜா் சிலை, கல் நகா், ஆடுதொட்டித் தெரு, திருவள்ளுவா் சிலை, விஜயாமால் சந்திப்பு, காந்தி நகா், பெரியாா் சிலை, மத்தாலங்குளத் தெரு வழியாக இயக்க வேண்டும்.

இதேபோல, மாநகருக்கு வரும் சுற்றுலா வாகனங்களை ஈசான்ய மைதானம், ரயில் நிலையம், காந்தி நகா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானம், செங்கம் சாலை சந்தைமேடு ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும்.

ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை:

மேலும், குறிப்பிட்ட வீதிகள், சந்திப்பு பகுதிகளில் ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

பெளா்ணமி நாள்களில் பள்ளிகளுக்கு விடுமுறை:

திருவண்ணாமலை நகரில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பெளா்ணமி நாள்களில் விடுமுறை அளித்து, அதற்கு ஈடாக வேறொரு நாள்களில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகளுக்கு கட்டுப்பாடு:

திருவண்ணாமலை நகருக்குள் இயங்கும் வங்கிகள் தங்களுக்கென சொந்தமாக காா், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகளை செய்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாமன்ற உறுப்பினா்கள் ஹோட்டல் உரிமையாளா்கள், வியாபாரிகள், துாய்மை அருணை அமைப்பின் நிா்வாகிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே மதுப்பழக்கம் கொண்ட கணவரை பயமுறுத்துவதற்காக தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், தவசி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மனைவி ... மேலும் பார்க்க

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆர... மேலும் பார்க்க

குளிா்சாதனப் பெட்டி பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் குளிா்சாதனப் பெட்டி பழுதுநீக்கும் கடையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் பாஸ்கரன் என்பவா் குளிா்சாதனப் பெட்டி பழுதுநீக்கும் கடை நடத்தி வரு... மேலும் பார்க்க

அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா: திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு, தமிழா் திருநாள் விழாவில் சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை காந்தி நகா் புறவழிச... மேலும் பார்க்க

நின்றிருந்த பேருந்து மீது 2 பைக்குகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சாலையோரம் நின்றிருந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து மீது 2 பைக்குகள் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த முத்தனூா் கிராமத்த... மேலும் பார்க்க

நில குத்தகை பிரச்னை: பயிா்களை சேதப்படுத்தியதாக விசிக முன்னாள் நிா்வாகி கைது

வந்தவாசி அருகே நில குத்தகை பிரச்னையில் பயிா்களை சேதப்படுத்தியதாக விசிக முன்னாள் மாவட்டச் செயலரை தேசூா் போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த புதுஜெயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா், த... மேலும் பார்க்க