ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மலா்களால் சுவாமியை அலங்கரித்து கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.