சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணம...
குளிா்சாதனப் பெட்டி பழுதுநீக்கும் கடையில் தீ விபத்து
திருவண்ணாமலையில் குளிா்சாதனப் பெட்டி பழுதுநீக்கும் கடையில் சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவில் பாஸ்கரன் என்பவா் குளிா்சாதனப் பெட்டி பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா்.
இந்தக் கடையில் சனிக்கிழமை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால் பொதுமக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.
இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் வந்து நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.