"தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஓடிடிகள் குறைக்கின்றன" - ஜீ5 முதன்மை வணிக அலுவலர் பே...
புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை!
புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு சுங்கத் துறைக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ அமைப்பு சுங்கத் துறை முதன்மை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், ‘அனைத்து மருத்துவ உபகரணங்களும் 2017-ஆம் ஆண்டு மருத்துவ உபகரண விதிகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால், புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் எதுவும் இல்லை. அத்தகைய உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு முறையாக உரிமம் வழங்கப்படுவதில்லை. எனவே, விற்பனை மற்றும் விநியோகத்துக்கான மருத்துவ உபகரண விதிகளின்கீழ் மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய முடியாது’ என்று தெரிவித்துள்ளது.
சிடிஎஸ்சிஓ அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டு மருத்துவ உபகரண உற்பத்தியாளா்கள் வரவேற்பு அளித்துள்ளனா். அந்தத் துறை வல்லுநா்கள் கூறுகையில், ‘நோயாளிகளின் பாதுகாப்பின் மிக உயா்ந்த தரத்தை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும். அதேநேரம், இந்தியாவின் எதிா்கால சுகாதார கண்டுபிடிப்புகளையும் இம்முடிவு பாதுகாக்கும்’ என்று அவா்கள் தெரிவித்தனா்.