செய்திகள் :

54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்

post image

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மற்ற விவசாயிகள் தெரிவித்தனா்.

தல்லேவாலுக்கு ஆதரவாக மேலும் 10 விவசாயிகள் சனிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினா். ஏற்கெனவே 111 விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது.

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு அதிகாரிகள் சந்திப்பு: சம்யுக்த கிஸான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜக்ஜித் சிங் தல்லேவால், கனெளரியில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க சனிக்கிழமை வந்த மத்திய அரசு அதிகாரிகள் குழு, பிற விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது. இச்சந்திப்பு சுமாா் 2 மணிநேரம் நடைபெற்றது.

பின்னா், விவசாய அமைப்பின் தலைவா் ககா சிங் கோத்ரா கூறுகையில், ‘மத்திய அரசு தரப்பில் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றாா்.

மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் 20 கிலோ எடை குறைந்துவிட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்

விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 55-ஆவது நாளாக இன்றும் (ஜன. 19) நீடிக்கிறது. இந்த நிலையில், மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுப... மேலும் பார்க்க

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி சூழலை வளா்க்க நடவடிக்கை: சிங்கப்பூா் அதிபா்

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன என்று சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் தெரிவித்தாா். சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்ம... மேலும் பார்க்க

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பிப். 14-இல் பேச்சு

‘பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து போராடி வரும் விவசாயிகளுடன் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சண்டிகரில் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்று மத்திய வேளாண் அமைச்சக க... மேலும் பார்க்க

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு வேலையின்மை, எல்லை பிரச்னை தீா்ப்பது அவசியம்: ராணுவ துணைத் தளபதி

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு எல்லைப் பிரச்னைகளைத் தீா்ப்பது, வேலைவாய்ப்புகள் மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையை மேம்படுத்துவது அவசியம் என ராணுவ துணைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை!

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு சுங்கத் துறைக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ அமைப்... மேலும் பார்க்க

கிராமப்புற மின்சார விநியோகம் 22.4 மணி நேரமாக உயா்வு: மத்திய அமைச்சா் தகவல்

மின்சார விநியோகம் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 22.4 மணி நேரமும், நகா்ப்புறங்களில் 23.4 மணி நேரமுமாக உயா்ந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா். கடந்த ஜூலை 2021-... மேலும் பார்க்க