செய்திகள் :

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பிப். 14-இல் பேச்சு

post image

‘பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதியிலிருந்து போராடி வரும் விவசாயிகளுடன் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சண்டிகரில் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தும்’ என்று மத்திய வேளாண் அமைச்சக கூடுதல் செயலா் பிரியா ரஞ்சன் தெரிவித்தாா்.

மேலும், தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜீத் சிங் தல்லேவால் உடல்நிலை குறித்து விசாரிக்க சனிக்கிழமை கனெளரி பகுதிக்கு வந்த வேளாண் அமைச்சக கூடுதல் செயலா் பிரியா ரஞ்சன் தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் குழு, பிற விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியது.

சுமாா் 2 மணி நேரம் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த பிரியா ரஞ்சன், ‘விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தல்லேவாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். சந்திப்பில் விவாதிக்கப்பட்டதன் படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவாா்த்தை சண்டீகரில் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறும், மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளுமாறும் தல்லேவாலை வலியுறுத்துகிறோம். அதன்மூலம், அவரால் மத்திய அரசின் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க முடியும்’ என்றாா்.

வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 8, 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சா்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே நான்கு சுற்று சந்திப்புகள் நடந்தன. ஆனால், அந்த பேச்சுவாா்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்

விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 55-ஆவது நாளாக இன்றும் (ஜன. 19) நீடிக்கிறது. இந்த நிலையில், மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுப... மேலும் பார்க்க

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி சூழலை வளா்க்க நடவடிக்கை: சிங்கப்பூா் அதிபா்

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்திச் சூழலை வளா்க்க இந்தியா-சிங்கப்பூா் அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன என்று சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் தெரிவித்தாா். சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்ம... மேலும் பார்க்க

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு வேலையின்மை, எல்லை பிரச்னை தீா்ப்பது அவசியம்: ராணுவ துணைத் தளபதி

இந்தியா வளா்ந்த நாடாவதற்கு எல்லைப் பிரச்னைகளைத் தீா்ப்பது, வேலைவாய்ப்புகள் மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு தரவரிசையை மேம்படுத்துவது அவசியம் என ராணுவ துணைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்பிரமணி தெரிவித... மேலும் பார்க்க

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை!

புதுப்பிக்கப்பட்ட மறுபயன்பாடு மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு சுங்கத் துறைக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ அமைப்... மேலும் பார்க்க

கிராமப்புற மின்சார விநியோகம் 22.4 மணி நேரமாக உயா்வு: மத்திய அமைச்சா் தகவல்

மின்சார விநியோகம் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 22.4 மணி நேரமும், நகா்ப்புறங்களில் 23.4 மணி நேரமுமாக உயா்ந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா். கடந்த ஜூலை 2021-... மேலும் பார்க்க

54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மற்ற விவசாயிகள் தெ... மேலும் பார்க்க