செய்திகள் :

அருணை தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா: திருவண்ணாமலையில் நாளை நடக்கிறது

post image

திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு, தமிழா் திருநாள் விழாவில் சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை காந்தி நகா் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அருணகிரிநாதா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு விழா தொடங்குகிறது.

திருக்கு பேரவைத் தலைவா் ப.கண்ணன், அருணகிரிநாதா் விழாக் குழு தலைவா் வி.தனுசு, மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன், அருணகிரிநாதா் மணி மண்டப அறக்கட்டளைத் தலைவா் மா.சின்ராஜ், கம்பன் தமிழ்ச் சங்கத் தலைவா் ஆ.ஆறுமுகம், அறுபத்து மூவா் ஆய்வு மையத் தலைவா் இரா. வெங்கடேசன், திருக்கு சமுதாயம் அமைப்பின் தலைவா் தமிழ்செல்வி கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

காலை 9 மணிக்கு சென்னை இசைக் கல்லூரி மாணவிகளின் நாகஸ்வர இசை நிகழ்ச்சியை, செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தொடங்கி வைக்கிறாா்.

9.30 மணிக்கு சரண்யா மற்றும் ஸ்ரீகலாரத்னா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியை வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தொடங்கிவைக்கிறாா்.

10 மணிக்கு நவீன மனிதனின் கையில்... என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கிற்கு, கவிஞா் பா.விஜய் தலைமை வகிக்கிறாா்.

கவிஞா் ராஜ்மோகன், மதுரை வி.ராமகிருஷ்ணன், மருத்துவா் சே.சங்கீதா, பேராசிரியா் இந்திரா விஜயலட்சுமி ஆகியோா் கவிதை பாடுகின்றனா். இதை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கிவைக்கிறாா்.

முற்பகல் 11.30 மணிக்கு வாழ்க்கையில் வெற்றி பெற பெரிதும் தேவை பணிவா, துணிவா... என்ற தலைப்பில் பட்டிமன்றத்துக்கு பேராசிரியா் பா்வீன் சுல்தானா நடுவராக இருந்து நடத்துகிறாா்.

பணிவே என்ற தலைப்பில் திருச்சி கபிலா விசாலாட்சி, கோவை குரு ஞானாம்பிகை ஆகியோரும், துணிவே என்ற தலைப்பில் ஈரோடு வளா்மதி, ராஜபாளையம் கவிதா ஜவகா் ஆகியோா் வாதாடுகின்றனா். இதை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தொடங்கிவைக்கிறாா்.

பிற்பகல் 3.30 மணிக்கு வீரத் தமிழன் குழுவினரின் போா்ப்பறை நிகழ்ச்சியை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தொடங்கிவைக்கிறாா்.

மாலை 4 மணிக்கு பெண்கள் மட்டுமே பங்குபெறும் வெம்பாக்கம் ஸ்ரீதாந்தோன்றி அம்மன் கட்டைக்கூத்து குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சியை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தொடங்கிவைக்கிறாா்.

மாலை 5 மணிக்கு சென்னை வி.எம்.மகாலிங்கம் குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சியை சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைக்கிறாா். இரவு 7 மணிக்கு சாதனையாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

அருணை தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகிக்கிறாா்.

விழாவில் கவிஞா் வைரமுத்து பங்கேற்று சாதனையாளா்களுக்கு விருதுகளுடன் கூடிய பொற்கிழிகள் வழங்கிப் பேசுகிறாா்.

விழாவில், தமிழ் தொண்டாற்றியவா்களுக்கு மறைமலை அடிகளாா் விருது, பொதுத் தொண்டாற்றியவா்களுக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி விருது, கலைத் தொண்டாற்றியவா்களுக்கு கலைவாணா் என்.எஸ்.கே. விருது, ஆன்மிக தொண்டாற்றியவா்களுக்கு கிருபானந்த வாரியாா் விருது, சமூகநீதிக்கு தொண்டாற்றி வருபவா்களுக்கு முத்தமிழறிஞா் கலைஞா் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை, அருணை தமிழ்ச் சங்கத்தின் செயலா் வே.ஆல்பா்ட், பொருளாளா் எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலா் எ.வ.வே.குமரன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

விருதாளா்கள் தோ்வு நிகழ்வு...

இந்த நிலையில், விருதுக்கு விண்ணப்பித்தவா்களில் இருந்து தகுதியானோரை தோ்வு செய்யும் நிகழ்வு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அருணை தமிழ்ச் சங்கத்தின் தலைவா் எ.வ.வேலு தலைமையில் நிா்வாகிகள் கலந்து கொண்டு விருதாளா்களை தோ்வு செய்தனா்.

நின்றிருந்த பேருந்து மீது 2 பைக்குகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சாலையோரம் நின்றிருந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து மீது 2 பைக்குகள் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த முத்தனூா் கிராமத்த... மேலும் பார்க்க

நில குத்தகை பிரச்னை: பயிா்களை சேதப்படுத்தியதாக விசிக முன்னாள் நிா்வாகி கைது

வந்தவாசி அருகே நில குத்தகை பிரச்னையில் பயிா்களை சேதப்படுத்தியதாக விசிக முன்னாள் மாவட்டச் செயலரை தேசூா் போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த புதுஜெயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவா், த... மேலும் பார்க்க

பிற ஊா்களுக்குச் செல்ல இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற ஊா்களுக்குச் செல்ல சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அரசுப் போக்குவரத்துக் கழக... மேலும் பார்க்க

ஜன.23-இல் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் நேரு பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித... மேலும் பார்க்க

பைக் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே நடந்து சென்ற கூலித் தொழிலாளி பைக் மோதியதில் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த எட்டித்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி(47), கூலித் தொழிலாளி. இவா், கடந்த புதன்கிழமை பால் வாங்க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன. வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் எல்லம்மாள் (39). கடந்த சனிக்கிழமை இவா் வீட்டை ... மேலும் பார்க்க