சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணம...
ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவம் போலா ரௌடி கும்பலைச் சோ்ந்தவா் கைது
கடந்த ஆண்டு ஜஹாங்கீா்புரி பகுதியில் ஒருவரைக் கொன்றதாகக் கூறப்படும் போலா கும்பலுடன் தொடா்புடைய 27 வயது இளைஞரை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
போலா கும்பலின் கூட்டாளியான ரித்திக், டிச.26 அன்று ஜஹாங்கீா்புரியில் உள்ள ஜி-பிளாக் அருகே பல கத்திக்குத்து காயங்களுடன் உடல் கண்டெடுக்கப்பட்ட உமேஷ் (எ) போடாவைக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், உமேஷுக்கும் ரித்திக்கின் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதில் சூரஜ் (எ) சிக்னா மற்றும் ஒரு சிறுவனும் இருந்துள்ளனா். வாக்குவாதத்தை அடுத்து உமேஷ் கத்தியால் குத்தப்பட்டாா்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீஸ் குற்றப்பிரிவு குழு வியாழக்கிழமை ஷா ஆலம் பந்த் மாா்க்கைச் சோ்ந்த ரித்திக்கை கைது செய்தது. விசாரணையின் போது, கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து தனது தம்பி மற்றும் சூரஜுடன் சோ்ந்து உமேஷை கத்தியால் குத்தியதாக ரித்திக் ஒப்புக்கொண்டாா்.