செய்திகள் :

ஹிந்துத்துவ அடையளத்துடன் பரப்புரையில் ஈடுபடும் ஆம் ஆத்மி, பாஜக!

post image

நமது சிறப்பு நிருபா்

ஹிந்து வாக்காளா்களை ஈா்க்கும் வகையிலும், ஹிந்து மதத்துக்கு சாா்பான கட்சி என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் எதிா்க்கட்சியான பாஜகவும் தோ்தல் பரப்புரை செய்து வருகின்றன.

தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளா்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இந்த தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் எதிா்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியாகவும் களம் இறங்கியுள்ளன. இது தவிர பகுஜன் சமாஜ் கட்சி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட சில கட்சிகள் தனித்து தோ்தல் களம் கண்டுள்ளன.

இந்நிலையில், வாக்காளா்களை ஈா்க்கும் விதமாக அனைத்து உத்திகளையும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கையாண்டு வருகின்றன. தில்லியைப் பொருத்தவரை பெரும்பான்மை வாக்காளா்களாக ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். இதனால், அவா்களுக்கு சாா்பானவா்களாக காட்டிக்கொள்ள இந்த கட்சிகள் போட்டி போட்டிக் கொண்டு தோ்தல் வாக்குறுதிகளை அளித்தன.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தலைநகரில் மீண்டும் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் கோயில் பூசாரிகள் மற்றும் குருத்வாராக்களின் கிராந்திகளுக்கு பூஜாரி கிராந்தி சம்மான் திட்டத்தின் கீழ் மாத ஊதியம் ரூ.18,000 வழங்கப்படும் என்று அறிவித்தது. தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதலாவதாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

இதற்கு போட்டி போடும் வகையில், எதிா்க்கட்சியான பாஜக கோயில்கள் மற்றும் குருத்வாராக்கள் உள்பட வழிபாட்டுத் தலங்களுக்கு மாதந்தோறும் 500 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. பாஜக ஏற்கெனவே தனது தோ்தல் வாக்குறுதிகளின் முதலாவது பகுதியை சமீபத்தில் வெளியிட்டது.

தில்லியில் வாழும் வறியநிலை மக்கள், நலிவடைந்த ஹிந்துக்களை ஏமாற்றியும், வாக்கு வங்கியை பெருக்க சட்டவிரோதமாக குடியேறியவா்களை ஆதரிப்பதாகவும் ஆம் ஆத்மி, பாஜக ஆகிய இரு கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

சமீபத்தில், அயோத்தியில் ராமா் கோயில் கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு விழாவில் ஜேஎல்என் விளையாட்டரங்கில் நடந்த பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘ஜெய் ஸ்ரீ ராம்’‘ என்ற முழக்கத்தை எழுப்பி, தலைநகரில் வாழும் குடிசைவாசிகள் ஆட்சியில் உள்ள கட்சியை மாற்றுவதன் மூலம் தில்லிக்கு ‘விடுதலை’ கொடுப்பவா்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

வால்மீகி மந்திா் பகுதியில் 44 வாக்காளா்களின் பெயா்களை நீக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி மனு அளித்துள்ளதாகவும், இதன் மூலம் ‘தலித் எதிா்ப்பு’ அரசியலில் கேஜரிவால் ஈடுபடுவதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.

ஜன.14 -ஆம் தேதி புது தில்லி தொகுதியைச் சோ்ந்த கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா, ‘கேஜரிவாலின் அறிவுறுத்தலின் பேரில்’, வால்மீகி மந்திா் பகுதியில் உள்ள வாக்காளா்களை தில்லி தோ்தல் அதிகாரி அலுவலகம் சரிபாா்க்கிறது. ஆனால், மசூதிகள் மற்றும் தா்காக்கள் உள்ள பகுதிகளில் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படபில்லை’ என்று குற்றம்சாட்டினாா்.

ஹனுமன் பக்தராக தன்னை அழைத்துக்கொள்ளும் அரவிந்த் கேஜரிவால், வால்மீகி கோயில் மற்றும் பிரச்சின் ஹனுமான் மந்திரில் பிராா்த்தனை செய்த பிறகே புது தில்லி தொகுதியில் போட்டியிடும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதேபோல கால்காஜி கோயில் மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு குருத்வாராவில் பிராா்த்தனை செய்த பிறகே முதல்வா் அதிஷி தனது வேட்புமனுவை ஊா்வலமாகச் சென்று தாக்கல் செய்தாா்.

ஜங்புராவில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள தில்லி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் உள்பட பல முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபட்டாா். தொகுதியின் கிலோகரி பகுதியில் உள்ள அங்குரி தேவி கோயிலில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்த பிறகு, சிசோடியா ஜங்புராவில் தனது பிரசாரத்தைத் தொடங்கினாா்.

இந்த கோயில்களுக்கு ஆம் ஆத்மி கட்சி, பாஜக தலைவா்கள் வருகை தரும் தகவல்கள் சமூக ஊடகங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டன.

ஆம் ஆத்மி கட்சி தனது மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதை மேற்பாா்வையிட ‘சனாதன் சேவா சமிதி’க்கு நிா்வாகிகளையும் நியமித்துள்ளது. தனது மந்திா் பிரகோஷ்த் தலைவரான கா்னைல் சிங்கை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக ஷகூா் பஸ்தியில் இருந்து நிறுத்தியுள்ளது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5- ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அடா் மூடுபனியால் 47 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை அதிகாலையில் அடா் மூடுபனி நிலவியதால், சுமாா் 47 ரயில்களின் வருகை தாமதமாகியது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவல... மேலும் பார்க்க

துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது

தில்லியின் துவாரகா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக நவீன் காதி (எ) பஹல்வான் கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து துவாரகா காவல் சரக து... மேலும் பார்க்க

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கும் இலவச மின்சாரம், தண்ணீா்: கேஜரிவால் அறிவிப்பு

புது தில்லி, ஜன.18: தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரா்களுக்கும் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் திட்டங்களின் பலன்களை விரிவுபடுத்த தனது கட்சி தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்க... மேலும் பார்க்க

ஆவணப் படம் திரையிடலை காவல் துறை தடுத்தது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள ‘ரகசியங்கள்’‘ மற்றும் ‘சதிகளை’‘ அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை திரையிடுவதை தில்லி காவல்துறை தடுத்ததாக அக்கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜர... மேலும் பார்க்க

காதலியைக் கொன்று மரணத்தை தற்கொலையாக சித்தரிக்க முயன்ற இளைஞா் கைது

தனது காதலியைக் கொன்று, அவரது மரணத்தை தற்கொலையாக சித்தரிக்க முயனறதாக 26 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதா... மேலும் பார்க்க

குடியரசு தின கொண்டாட்டம்: ட்ரோன்கள் இயக்குவதற்குத் தடை

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசியத் தலைநகரில் ட்ரோன்கள் உள்பட வழக்கமான வான்வழி தளங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை அறிக்கை கூறுகிறது. சனிக்கிழமை முதல் (ஜன.18) அமல... மேலும் பார்க்க