அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
குடியரசு தின கொண்டாட்டம்: ட்ரோன்கள் இயக்குவதற்குத் தடை
குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசியத் தலைநகரில் ட்ரோன்கள் உள்பட வழக்கமான வான்வழி தளங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை அறிக்கை கூறுகிறது.
சனிக்கிழமை முதல் (ஜன.18) அமலுக்கு வந்த இந்தக் கட்டுப்பாடு பிப்.1 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தில்லி காவல்துறை ஆணையா் சஞ்சய் அரோரா பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு விரோதமான நபா்கள் அல்லது சமூக விரோத சக்திகள் அல்லது பயங்கரவாதிகள் அத்தகைய வான்வழி தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுப் பாதுகாப்பு, பிரமுகா்கள் மற்றும் முக்கிய நிறுவல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பாராகிளைடா்கள், பாரா-மோட்டாா்கள், ஹேங் கிளைடா்கள், ஆளில்லா விமான அமைப்புகள், மைக்ரோ-லைட் விமானங்கள், ரிமோட் பைலட் விமானம், ஹாட் ஏா் பலூன், குவாட்காப்டா்கள் போன்ற தளங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து பாரா-ஜம்பிங் செய்வதையும் இது தடை செய்கிறது.
‘எனவே, குடியரசு தினத்தன்று தேசியத் தலைநகரின் மீது வழக்கத்திற்கு மாறான வான்வழி தளங்களை பறப்பதை தில்லி காவல்துறை தடை செய்துள்ளது. மேலும், அவ்வாறு செய்வது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 223- இன் கீழ் தண்டனைக்குரியது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.