செய்திகள் :

ஆம் ஆத்மியின் திட்டங்களை நகலெடுக்கும் பாஜக: பிரியங்கா கக்கர்

post image

தில்லி தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மியின் திட்டங்களை பாஜக நகலெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் குற்றம் சாட்டியுள்ளார்

தேர்தலை எதிர்கொள்ளவுள்ள தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சிகள் தேர்தல் அறிக்கையை போட்டிப்போட்டுக் கொண்டு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தில்லியில் நலத்திட்டங்கள் தொடரும் என பாஜகவின் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். கேஜரிவாலின் திட்டங்களை தேர்தல் அறிக்கையில் ஏற்றுக்கொண்ட போது, எங்களுடைய திட்டங்களை இலவசங்கள் என்று பிரதமர் மோடி பொய் கூறி வருகிறார். பாஜக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் ஒப்புதல் இருக்கின்றதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500-ம் கர்ப்பிணிகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்த வாக்குறுதிகளை நகலெடுத்து பாஜக பின்பற்றி வருகிறது. அவர்களுக்கு எந்தவித யோசனைகளும் தொலைநோக்கு பார்வையும் இல்லை. கேஜரிவாலின்' ஆட்சி மாதிரியை மட்டுமே பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள்! ஜோதிடம் கூறுவது என்ன?

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் ஜனவரி 21-ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது பிப்ரவரி வரை வானில் தெரியும்.பொதுவாக இந்த கிரகங்களின் அணிவகுப்புக்கும், ஜாதகத்துக்கும், ராசிக்காரர... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு: சஞ்சய் ராய் கூச்சல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவ... மேலும் பார்க்க

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி,... மேலும் பார்க்க

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும்: சிவராஜ் சிங் சௌஹான்

கர்நாடக மாநில பாஜக தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் மத்திய அமைச்சரும் கர்நாடக பாஜகவின் உள்கட்சித் தேர்தல் ... மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய... மேலும் பார்க்க

திருப்பதி அருகே திரையரங்கில் பலியிடப்பட்ட ஆடு! பிரபல நடிகரின் ரசிகர்கள் கைது!

டாகு மகாராஜ் வெளியீட்டின்போது, திரையரங்குக்கு வெளியே ஆட்டை பலிகொடுத்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் த... மேலும் பார்க்க