செய்திகள் :

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி

post image

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற 'அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் (சம்விதன் சுரக்ஷா சம்மேளனம்) கலந்துகொண்டு பேசினார்.

மத்திய பாஜக அரசைவும் ஆர்எஸ்எஸ்ஸையும் அவர் விமரிசித்துப் பேசினார்.

'பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள் பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்பதை அவர்கள்(பாஜக) அறிந்ததும் அவர்கள் அதிகாரத்தைப் பறித்தார்கள்.

மத்திய பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி, ஆர்.எஸ்.எஸ்-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் தங்கள் ஆள்களை வைத்திருக்க நினைக்கிறார்கள்.

இதையும் படிக்க | இந்தியா கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு!

நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பிகாரில் நடத்தப்பட்ட போலி சாதிவாரி கணக்கெடுப்புப்போல இது இருக்கக்கூடாது.

சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். 50% இடஒதுக்கீடு என்ற தடையை நாங்கள் தகர்ப்போம்' என்று பேசினார்.

கிரிப்டோகரன்சி முதலீடு: ரூ. 300 கோடி மோசடி செய்த குஜராத் நிறுவனம்!

குஜராத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து தருவதாகக் கூறி தனியார் நிறுவனம் ஒன்று 8,000 பேரிடம் ரூ. 300 கோடி மோசடி செய்துள்ளது. குஜராத் ராஜ்கோட் நகரிலுள்ள பிளாக்கரா எனும் தனியார் நிறுவனம் கிரிப்டோகர... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கு: முக்கியக் குற்றவாளி சத்தீஸ்கரில் கைது!

நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை சத்தீஸ்கரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: புனித நீராடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புனித நீராடினார்.உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியை... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் வாகனம் மீது தாக்குதல்: பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது. தில்லியில் வருகிற ப... மேலும் பார்க்க

ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்கள்! ஜோதிடம் கூறுவது என்ன?

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் ஜனவரி 21-ஆம் தேதி நிகழவிருக்கிறது. இது பிப்ரவரி வரை வானில் தெரியும்.பொதுவாக இந்த கிரகங்களின் அணிவகுப்புக்கும், ஜாதகத்துக்கும், ராசிக்காரர... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு: சஞ்சய் ராய் கூச்சல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவ... மேலும் பார்க்க