இயக்குநர் ராமின் புதிய படம்!
இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான கதைகளை அழகுடன் அழுத்துமான மொழியில் பதிவு செய்யும் இயக்குநர்களில் ஒருவர் ராம்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கி சிறந்த இயக்குநர் என விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர். நீண்ட நாள்களாக ராம் இயக்கத்தில் உருவான நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்த ஏழுகடல் ஏழுமலை திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: பாட்டல் ராதா டிரைலர்!
இதனைத் தொடர்ந்து, ராம் புதிய படத்தை இயக்கவுள்ளார். நடிகர்கள் மிர்ச்சி சிவா, மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, ‘பறந்து போ’ எனப் பெயரிட்டுள்ளனர். ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.