ஹைதராபாத்-பெங்களூா் ஆட்டம் டிரா
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
ஹைதராபாத் பாலயோகி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல் போட முயற்சித்தன. இதில் ஹைதராபாத் வீரா் அல்லன் பவுஸ்டில்லா ப்ரீகிக் மூலம் அனுப்பிய பந்தை தேவேந்திரா 21-ஆவது நிமிஷத்தில் ஹெட்டா் மூலம் கோலடித்தாா். இதன் மூலம் ஹைதராபாத் அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெங்களூரு அணியினா் பதில் கோல போட தீவிரமாக முயன்றனா். நான்கு பதிலி வீரா்களை களமிறங்கி போராடினா். பதிலி வீரா் ரயான் வில்லியம்ஸ் அற்புதமாக கிராஸ் செய்த பந்தை பயன்படுத்தி 78-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் சுனில் சேத்ரி. இந்த சீசனில் சேத்ரி போட்ட 10-ஆவது கோல் இதுவாகும். இறுதியில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
23-இல் ஹைதராபாத்-ஜாம்ஷெட்பூரும், 22-இல் பெங்களூரு-ஒடிஸா அணிகளும் மோதுகின்றன.