செய்திகள் :

மகா கும்பமேளா: புனித நீராடிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

post image

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புனித நீராடினார்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) தொடங்கியது.

மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இங்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை புனித நீராடினார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "இன்று பிரயாக்ராஜ் சங்கத்தில் குளித்ததை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இது இந்தியர்களின் ஆன்மிக மற்றும் கலாச்சார மெகா திருவிழா.

இதனை சமூகம் அல்லது மதத்தோடு யாரும் தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, கோயில் பூசாரியிடம் நலம் விசாரித்த பாதுகாப்பு அமைச்சர், மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க ராணுவ அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

கிராமப்புற மின்சார விநியோகம் 22.4 மணி நேரமாக உயா்வு: மத்திய அமைச்சா் தகவல்

மின்சார விநியோகம் கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 22.4 மணி நேரமும், நகா்ப்புறங்களில் 23.4 மணி நேரமுமாக உயா்ந்துள்ளது என மத்திய மின்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா். கடந்த ஜூலை 2021-... மேலும் பார்க்க

54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மற்ற விவசாயிகள் தெ... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தலால் மாநில பிரச்னைகள் கவனம் பெறாது: கபில் சிபில்

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறையால் மாநிலங்களின் பிரச்னைகள் கவனம் பெறாமல்போகும் என்று மூத்த வழக்குரைஞா் கபில்சிபில் கூறினாா். சென்னையில் திமுக சட்டத் துறை 3-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதில்... மேலும் பார்க்க

புதிய வருமான வரிச் சட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்பு

தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் புதிய வருமான வரிச் சட்டம், வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்ப... மேலும் பார்க்க

கிராம சுயராஜ்யம்: பிரதமா் மோடி உறுதி: 65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் வழங்கல்

கிராம சுயராஜ்யத்தை அமலாக்க மத்திய அரசு உறுதியுடன் செயலாற்றுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் ‘ஸ்வாமித்வ’ (கிராமப்புற கணக்கெடுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் ... மேலும் பார்க்க

ரஜௌரி உயிரிழப்புகள்: அமைச்சகங்களுக்கு இடையேயான மத்தியக் குழுவுக்கு அமித் ஷா உத்தரவு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஆறு வாரங்களில் சுமாா் 16 போ் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுவை அமைத்து உள்துற... மேலும் பார்க்க