செய்திகள் :

விளம்பரம் தேவைப்படாத சூப்பர் ஸ்டார் அஜித் குமார்: நடிகர் மாதவன்

post image

ஹிசாப் பராபர் படத்தின் புரோமோ நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட தனியார் செய்தி நிறுவனப் பேட்டியில் நடிகர் அஜீத் குமார் குறித்து நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் அஷ்வனி தீர் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், நீல் நிதின் முகேஷ், கீர்த்தி குல்ஹாரி, ரஷாமி தேசாய் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிசாப் பராபர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கான புரோமோ நிகழ்ச்சியின்போது, தனியார் செய்தி நிறுவனப் பேட்டியில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.

மேலும், இந்தப் பேட்டியில் நடிகர் அஜீத் குமார் குறித்தும் நடிகர் மாதவன் பாராட்டிப் பேசினார். நடிகர் அஜீத் குறித்து மாதவன் கூறியதாவது, ``நடிகர் அஜீத் ஒரு பந்தய வீரர். அவருக்கு பைக்குகள் குறித்து நன்கு தெரியும். அவர் ஈடுபடும் அனைத்திலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார். அவர், அனைத்திலும் அளவுடனேயே பேசுவார்.

அதுமட்டுமின்றி, சினிமா வரலாற்றில், தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லாத ஒரே சூப்பர் ஸ்டார் அஜீத் குமார் மட்டுமே. இது நம்ப முடியாததுதான். அவரின் படங்கள் அஜீத் குமாரின் படங்கள் என்ற பெயரிலேயே அதிகம் பேசப்படுகின்றன.

இதையும் படிக்க:குடும்பஸ்தன் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!

அவர், தனது திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் எதுவும் செய்வதில்லை; நேர்காணல்கள் எதுவும் செய்வதில்லை. ஆனால், இதுபற்றி ஹிந்தி நடிகர்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

துபையில் ஜனவரி 11 ஆம் தேதியில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 911 GT3 R பிரிவில், நடிகர் அஜீத் குமாரின் குழுவான அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தினர். இந்தக் கார் பந்தயத்தைக் காணச் சென்ற நடிகர் மாதவன், வெற்றிபெற்ற அஜீத் குமாரை ஆரத் தழுவி, வாழ்த்து தெரிவிக்கும் விடியோவும் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலானது.

விடாமுயற்சி - வித்தியாசமான தோற்றத்தில் அஜித்?

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்தப்... மேலும் பார்க்க

குடும்பஸ்தன் டிரைலர்!

நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன்... மேலும் பார்க்க

குடும்பஸ்தன் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!

நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்க... மேலும் பார்க்க

ரேகா சித்திரம் படத்தைப் பாராட்டிய கீர்த்தி!

ரேகா சித்திரம் படத்துக்கு பாராட்டு தெரிவித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ளார்.நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் படம் நன்றாக இருப்பதாகக் கூறி, படக்குழுவினரைப் பாராட... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.18.01.2025மேஷம்இன்று வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும். கணவன்- மனைவி... மேலும் பார்க்க

ஸ்வெரெவ், அல்கராஸ், ஜோகோவிச் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா். ஆடவா் ஒற்றையா் ... மேலும் பார்க்க