இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்
ரேகா சித்திரம் படத்தைப் பாராட்டிய கீர்த்தி!
ரேகா சித்திரம் படத்துக்கு பாராட்டு தெரிவித்து, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள்ளார்.
நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் படம் நன்றாக இருப்பதாகக் கூறி, படக்குழுவினரைப் பாராட்டி, நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பதிவில், ``ரேகா சித்திரம் படத்தின் திரைக்கதை, எழுதப்பட்ட விதம், ஒவ்வொரு குறிப்பும் திகைப்படைய வைத்தது. அன்ஸ்வரா சிறப்பாக நடித்தது நேசிப்பதாக இருந்தது. ஆசிஃப் அலியின் கதைத் தேர்வு குறிப்பிடக் கூடியதாய் இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடிப்பில் ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா காண்டம் படத்துக்கு அடுத்ததாக ஆசிஃப் அலி நடித்த த்ரில்லர் படமாக இது அமைந்தது.
ஒரு பெண்ணின் மரணம் குறித்த மர்மத்தை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் கண்டுபிடிப்பதை மையமாகக் கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது.
இந்தப் படத்தில் அனஸ்வரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க:திருப்பதி அருகே திரையரங்கில் பலியிடப்பட்ட ஆடு! பிரபல நடிகரின் ரசிகர்கள் கைது!