செய்திகள் :

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் விவேக் ராமசுவாமி!

post image

இந்திய அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமெரிக்கத் தொழிலதிபர் விவேக் ராமசுவாமி (39) கடந்தாண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு பட்டியலில் இருந்தார். இந்த நிலையில், டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசின் செயல்திறன் துறைக்கு எலான் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசுவாமி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

விவேக் ராமசுவாமி சின்சினாட்டி நகரில் இந்தியப் பெற்றோருக்கு பிறந்தார். இவர் ஹார்வார்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர்.

டிரம்ப்பின் நம்பிக்கைகுரியவராக அறியப்படும் விவேக் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநராகப் போட்டியிட இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?

அரசின் செயல்திறன் துறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதும், ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதுமே விவேக் ராமசுவாமியின் தற்போதைய குறிக்கோள் என்றும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இன்றி அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ வரைவு தயாராக உள்ள நிலையில், விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஓஹியோ மாகாணத் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. விவேக் ராமசுவாமி வெற்றி பெற்றால் தற்போதைய ஆளுநர் மைக் டிவைனுக்கு மாற்றாக அவர் ஆளுநராக பதவியேற்பார்.

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை மீறி வருவதாகவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்பு... மேலும் பார்க்க

வானில் ஒரே நேர்க்கோட்டில் ஏழு கோள்களின் அணிவகுப்பு! ஜன. 21-ல் கண்கொள்ளா காட்சி

வானில் ஏழு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து வரும் அதிசயம் இன்னும் சில நாள்களில் நிகழவிருக்கிறது.ஏழு கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் ஒரே டிகிரிக்குள் வருவதால், அவற்றை நம்மால் காண முடியும் என்பதா... மேலும் பார்க்க

அமெரிக்காவை இருட்டில் தள்ளும் டிக் டாக்?

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் டிக் டாக் செயலி தடை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் குறித்து சீனாவுக்கு பகிரப்படுவதாகக் கூறி, பாதுகாப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால், அதிபர் பதவியேற்பு விழாவை பொதுவெளியில் நடத்த இயலாது என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை... மேலும் பார்க்க

சீன மக்கள்தொகை 3-ஆவது ஆண்டாகச் சரிவு!

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024-லும் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

ரஷியா: நவால்னியின் வழக்குரைஞா்களுக்கு சிறைத் தண்டனை

ரஷியாவின் மறைந்த முன்னாள் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்காக வாதாடிய மூன்று வழக்குரைஞா்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்தது. வாடிம் கோப்ஸெவ், இகாா் சொ்... மேலும் பார்க்க