கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி ...
அமெரிக்காவை இருட்டில் தள்ளும் டிக் டாக்?
அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் டிக் டாக் செயலி தடை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் குறித்து சீனாவுக்கு பகிரப்படுவதாகக் கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவானது, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) முதல் அமலில் வரவுள்ளது. இல்லையெனில், டிக் டாக் செயலியை அமெரிக்காவுக்கு விற்றால் மட்டுமே, டிக் டாக் மீதான தடை உத்தரவு நீக்கப்படும் என்றும் கூறியது.
இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் செயலி வழக்கு தொடர்ந்தது. இருப்பினும், அவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிக்க:டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?
இதற்கிடையே, அமெரிக்காவில் சேவை வழங்குநர்களுக்கு உரிய உத்தரவாதத்தை வழங்க அமெரிக்க அரசு தவறி விட்டதாகவும், இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமைக்குள் அறிக்கை வெளியிடாவிட்டால், 17 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பயன்படுத்தும் டிக் டாக்கின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, அமெரிக்கா இருட்டில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். டிக் டாக் செயலியை தடை செய்வதன்மூலம், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதுடன், டிக் டாக் மூலம் வருவாய் ஈட்டி வரும் பலரும் பாதிக்கப்படுவர் என்றும் டிக் டாக் செயலியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலும் பயனர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 2020 ஆம் ஆண்டில் டிக் டாக் செயலி உள்பட 59 சீன நாட்டு செயலிகளை இந்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது.