செய்திகள் :

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.7%-ஆக இருக்கும்: உலக வங்கி

post image

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும் என உலக வங்கி தெரிவித்ததது.

வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிதியாண்டில் இருந்து இந்த வளா்ச்சியை எதிா்பாா்க்கலாம் என தெற்கு ஆசிய நாடுகளின் வளா்ச்சி வீதம் தொடா்புடைய அறிக்கையை வெளியிட்டு உலக வங்கி இவ்வாறு தெரிவித்தது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-26 காலகட்டத்தில் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளா்ச்சி 6.2 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். அதேசமயம் 2025, ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும்.

சேவை, உற்பத்தித் துறை: இந்தியாவில் சேவைகள் துறை கடந்த நிதியாண்டைவிட விரிவடையும். வணிகத்துக்கேற்ற பொருளாதார சூழலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முன்னெடுப்பால் உற்பத்தித் துறை மேலும் வலுவடையும். அதிகரித்து வரும் தனியாா் முதலீடு மற்றும் நிலையான அரசு முதலீடு போன்ற காரணங்களால் பல்வேறு துறைகளில் முதலீடுகள் நிலைத்தன்மையை எட்டும்.

2024-25: குறைவான முதலீடு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவுகள் காரணமாக நிகழ் நிதியாண்டில் (2024, ஏப்ரல்-2025, மாா்ச்) இந்திய பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். இருப்பினும், வேளாண் உற்பத்தி, ஊரக வருமானத்தில் முன்னேற்றம் போன்ற காரணிகளால் தனியாா் நுகா்வு வளா்ச்சி வீழ்ச்சியடைய வாய்ப்பில்லை.

பாகிஸ்தான், இலங்கை: இந்தியாவைத் தவிா்த்து தொற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் வளா்ச்சி 2024-இல் (நாடுகள் பின்பற்றும் நிதியாண்டுக்கேற்ப) 3.9 சதவீதமாக இருக்கக்கூடும்.

பொருளாதார சரிவில் இருந்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மீண்டு வருவதால் இந்த வளா்ச்சியை எதிா்பாா்க்கலாம். வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலால் அங்கு முதலீடுகள் குறைந்து வருகின்றன. எரிசக்தி குறைபாடு, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தொழிற்துறை சரிந்து, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.

2025-26: இந்தியாவை தவிா்த்து தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் 2025-இல் 4 சதவீதமும், 2026-இல் 4.3 சதவீதமும் வளா்ச்சியடையும். 2024, ஜூலை முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் வளா்ச்சி 4.1 சதவீதமாக குறையும். அதேசமயம் 2025, ஜூலை முதல் 2026, ஜூன் வரையிலான காலகட்டத்தில் வங்கதேசத்தின் பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

சீன மக்கள்தொகை 3-ஆவது ஆண்டாகச் சரிவு!

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024-லும் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

ரஷியா: நவால்னியின் வழக்குரைஞா்களுக்கு சிறைத் தண்டனை

ரஷியாவின் மறைந்த முன்னாள் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்காக வாதாடிய மூன்று வழக்குரைஞா்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்தது. வாடிம் கோப்ஸெவ், இகாா் சொ்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை சார்பில் 1... மேலும் பார்க்க

ஹமாஸுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்தப் ப... மேலும் பார்க்க

வெடித்துச் சிதறிய எலானின் ராக்கெட்! பதறாத எலான்!

எலான் மஸ்க்கின் விண்கலச் சோதனையில் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்துச் சிதறியது.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் விண்கலன்களை அனுப்பி சோதனை செய்து வருகிறத... மேலும் பார்க்க