செய்திகள் :

"11 லட்சம் கொடுத்து அந்த ஜல்லிக்கட்டு மாட்ட வாங்கினேன்..." - கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் பேட்டி

post image

ஜல்லிக்கட்டுக் களத்தில் கைக்குறிச்சி தமிழ்செல்வனின் மாடுகள் என்றால் பிரபலம். அவரைச் சந்தித்து அவருடைய அனுபவங்கள் குறித்துக் கேட்டறிந்தோம்.

ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை கைக்குறிச்சி தமிழ்செல்வன் என்கிற பெயர் தவிர்க்க முடியாத பெயராக இருக்கிறது. எப்போது இந்த பயணம் தொடங்கியது?

நான் 15 வயதுக்கு மேல்தான் ஜல்லிக்கட்டுக்குச் சென்றேன். அதன் பிறகு எனக்கும் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. நானும் ஜல்லிக்கட்டு மாட்டை வாங்கி விடுவோம் என்று தோன்றியது. அதன் பிறகு 22 வயதில் மாட்டை வாங்கினேன். ஆரன்குட்டை பக்கத்தில் வன்னாரம்பட்டி என்ற இடத்தில்தான் முதலில் ஒரு மாடு வாங்கினேன்.

கைக்குறிச்சி தமிழ்செல்வன்
கைக்குறிச்சி தமிழ்செல்வன்

அப்போது எல்லாரும் போக்கு மாட்டைத்தான் விரும்பினார்கள். சுத்து மாட்டை யாரும் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டைப் பொருத்தவரை இரண்டு வகை மாடுகள் இருக்கிறது. ஒன்று போக்கு மாடு, இன்னொன்று சுத்து மாடு.

போக்கு மாடு என்பது ஸ்டைலா வேகமாகப் போகும். ஒரே லைன்ல போயிட்டே இருக்கும். அப்போ எல்லாம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆடியன்ஸ் எல்லோரும் உள்ளே தான் நிற்பார்கள். வெளியில் நிற்க மாட்டார்கள். வெளியூர்களில் உள்ளவர்கள் எல்லோரும் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பே வந்து விடுவார்கள். வந்து இரவு சாப்பாடு, காலையில் டிபன், மதியம் சாப்பாடு எல்லாம் சாப்பிட்டு விட்டுத்தான் அதன் பிறகுதான் மாட்டை ஜல்லிக்கட்டில் விடுவார்கள். திருவிழாவுக்குத்தான் இது மாதிரி செய்வார்கள். மதியம் ஒரு மணி போல் தொடங்கி விடுவார்கள். அப்போ எல்லாம் முன்வாடிதான் இருந்தது. புறவாடியெல்லாம் இல்லை.

கைக்குறிச்சி தமிழ்செல்வன்
கைக்குறிச்சி தமிழ்செல்வன்

சுத்து மாடு என்பது வாடிவாசலிலிருந்து வந்ததும் நின்று விளையாடும். எல்லோருக்கும் ஆட்டம் காட்டும். அதுதான் முதல் பரிசு எல்லாம் வாங்கும். அதே இடத்தில் நின்று கொண்டு ரவுண்டு கட்டி சுற்றி விளையாடும். ஒரே மாடு போக்கு மாடாகவும் சுத்து மாடாகவும் இருக்கும். எப்படி என்றால், கொஞ்ச நேரம் சுற்றி விளையாடி விட்டு, அப்படியே போயிடும். ஒரு சில மாடு கடைசி வரை சுற்றி விளையாடிக் கொண்டே இருக்கும். அதனைக் கயிறு போட்டுத்தான் இழுத்து வரவேண்டும் அப்போதுதான் வரும்.

எப்போது நீங்கள் ஜல்லிக்கட்டில் ஃபேமஸ் ஆன ஆளாக மாறினீர்கள்?

போக்குமாடு இருக்கும் போது அப்பவே லோக்கலில் இருக்கிறவர்களுக்கு எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதன்பிறகு வெளியூருக்கலாம் கொண்டு செல்லும் பொழுது எல்லாரும் எனக்குப் பழக்கம் ஆகிவிட்டார்கள். அதன் பிறகு ஐயம்பட்டி, பலராம்பட்டி, தேனி என எல்லா பகுதிகளிலும் என்னைத் தெரிய ஆரம்பித்து விட்டது. மதுரையில் மாடு வாங்கச் சென்றாலே எல்லோருக்கும் என்னைத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

ஜல்லிக்கட்டு மாடு வைத்திருப்பவர்கள் நிறையச் செலவு செய்ய வேண்டுமா?

மாடு வைத்திருப்பவர்கள் பேராசை கொள்ளக்கூடாது. பேராசை வைத்தால் அழிவு தான் அவனுக்கு வரும். எனக்கு இந்த மாடுகளின் மேல் பேராசை இருக்கிறது. பேராசை பெரும் நஷ்டம் என்று சொல்வார்கள் அது போலத்தான் எனக்கும். இந்த மாட்டுச் செலவுகளுக்காகக் கோடிக்கணக்கில் நான் இழந்து இருக்கிறேன். இந்த மாட்டை வாங்கலாம் என்று எனக்குத் தோன்றினால் வாங்கிடுவேன். பிடி மாடாக இருந்தால் விற்றுவிடுவேன், போக்கு மாடாக இருந்தாலும் உடனே விற்று விடுவேன். பிடி மாடாக இருந்தால் அன்றைக்கே விற்று விடுவேன். போக்கு மாடாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விற்றுவிடுவேன்.

காளை
காளை

தீவனத்திற்குத்தான் அதிக செலவு ஏற்படும். உளுந்தம் பொட்டு, பாசி பொட்டு, துவரம் பொட்டு எல்லாம் கொடுப்பேன். எல்லாமே குறுணை வகைதான். தீவனம் எல்லாம் திருச்சி மாவட்டத்திலிருந்துதான் வாங்கி வருகிறேன். எல்லாம் குறுணையாகத்தான் இருக்கும். உம்மி போன்றவற்றைப் போடுவது இல்லை. மாட்டினுடைய உருவத்தைப் பொறுத்து தீவனம் கொடுப்பேன். சிறிய மாடாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் குறைவாகக் கொடுக்கணும். பெரிய மாடாக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் பெரிய அளவில் தீவனம் கொடுக்க வேண்டும்.

காளைகள்
காளைகள்

இப்போது எவ்வளவு மாடுகள் வைத்துள்ளீர்கள்?

இப்போ 30 மாடுகள் வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் ஒரு மாடு வாங்கினேன் அதன் பிறகு 30 மாடு 40 மாடு அந்த அளவில் தான் வைத்திருக்கிறேன். அப்போதே அதன் மேல் எனக்குப் பேராசை. என்னுடைய அப்பா, அம்மா சம்பாதித்த சொத்து எல்லாம் விற்றேன். எல்லாம் நிலங்களையும் விற்றுதான், இதனை நான் செய்கிறேன். கோடிக்கணக்கில் விற்று மாடுகளை வாங்கி இருக்கிறேன். தற்பொழுது ஒரு நிலம், வீடு அவ்வளவுதான் இருக்கிறது. மக்கள் எல்லோரும் என்னை விரும்புகிறார்கள். பிரபலமாகி இருக்கிறேன். அது ஒன்றுதான் எனக்கு லாபம். மற்றதபடி எனக்குச் சொத்துக்கள் தான் நிறைய அழிந்தன.

அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய்க்குக் காளை வாங்கி உள்ளீர்கள்?

தஞ்சாவூரிலிருந்து அதிகபட்சமாக 11 லட்சம் ரூபாய்க்கு ஒரு காளை வாங்கி இருக்கிறேன். இதைவிட அதிகபட்சமாக 15 லட்சம் வரை காளை வாங்குகின்றனர். தஞ்சாவூரில் இந்த காளையை ஜல்லிக்கட்டில் ஐந்து முறை விட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூபில் பார்த்துத்தான் இந்த மாட்டை வாங்கினேன். முதலில் அவங்க இந்த மாட்டைத் தரவில்லை என்றார்கள். அதன் பிறகு அதிக தொகை கொடுத்து வாங்கினேன். ஒரு பையன் காலேஜ்ல படிக்கிறான், அவன் தான் இந்த மாட்டை வளர்த்திருக்கிறான். அவன் அந்த மாட்டின் மேலேயே படுத்துக் கிடப்பான்.

காளை
காளை

அந்த அளவிற்கு அவன் அந்த மாட்டை வீட்டில் ஒரு ஆளைப் போல வளர்த்து வந்து இருக்கிறான். அவன் காலேஜுக்கு சென்ற நேரம் பார்த்து நாங்கள் இந்த மாட்டை வண்டியில் ஏற்றி வந்து விட்டோம். அதன் பிறகு அவனுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டோம். இந்த 11 லட்சம் மாட்டிற்குச் சிறப்பு என்னவென்றால் ஜல்லிக்கட்டுக் களத்தில் நல்லா விளையாடும். ரொம்ப நல்ல மாடு அமைதியாகத் தான் தெரியும், ஜல்லிக்கட்டுக்கு வண்டியில் ஏற்றும்போது அதனுடைய குணமே மாறிடும்.

ஜல்லிக்கட்டுக்கு மாட்டைத் தயார் செய்யும் முறை என்ன?

ஜல்லிக்கட்டுக்கு மாட்டைத் தயார் செய்வது கிடையாது. ட்ரைனிங் கொடுக்கிறோம், தயார் செய்கிறோம் என்பதெல்லாம் பொய். அதெல்லாம் சும்மா சொல்கிறார்கள்.

காளை
காளை

மண்ணை மாடு முட்டுவதெல்லாம் இயற்கையாகவே மாட்டிற்கு உள்ள குணம். நாம் சொல்லிக் கொடுத்து எல்லாம் அது குத்துவது இல்லை. இயற்கையாகவே அது மண்ணை குத்தும். அதற்கு ட்ரெய்னிங் எல்லாம் ஒன்னும் கிடையாது. நல்ல சாப்பாடு கொடுப்பேன். மாட்டைக் குளிப்பாட்டுவேன், வைத்துக் கொள்வேன் அவ்வளவுதான். ஐந்தறிவு ஜீவன் நாம் சொல்வதை எல்லாம் கேட்குமா, புரியாதவர்கள் தான் ஜல்லிக்கட்டுக்குத் தனிப் பயிற்சி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: `பெண்ணுக்கு பரிசப்பணம் தந்து..!’ - 'ஆதியன்' பழங்குடி திருமணங்கள்

'ஆதியன்'கந்தல் ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட மாடு, 'பூம்... பூம்... பூம்...' என்று ஸ்வரம் தவறாமல் இசைக்கும் உருமி, வண்ணத் தலைப்பாகையுடுத்தி தெலுங்கு கலந்த தமிழில் யாசிக்கும் மனிதர்... இவற்றைக் காணாதவர்கள்... மேலும் பார்க்க

மதுரை: திருப்பரங்குன்றத்தில் சமணர் குகை கோவில், சிற்பங்கள், கல்வெட்டுகள்.. `Hidden gem' Photo album

சமணர் குகை கோவில், சிற்பங்கள்சமணர் குகை கோவில், சிற்பங்கள்சமணர் குகை கோவில், சிற்பங்கள் மேலும் பார்க்க

’இந்த ஆண்டில் காளைக்கு... அடுத்த ஆண்டிலிருந்து வீரருக்கும் கார் பரிசு!’ - செந்தில் பாலாஜி அறிவிப்பு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே இராசாண்டார் திருமலையில் (ஆர்.டி.மலை ) காணும் பொங்கலையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்ட 729 காளைகள் பங்கேற்று விளையாடின. 380 காளையர்கள் ஆறு பிரிவுகளாக... மேலும் பார்க்க

காணும் பொங்கலை கொண்டாட வண்டலூர் பூங்காவில் குவிந்த மக்கள் | Photo Album

வண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டலூர் பூங்காவண்டல... மேலும் பார்க்க

நீலகிரி: குல தெய்வத் திருவிழா... நடனமாடி கொண்டாடிய கோத்தர் பழங்குடியின மக்கள்! | Photo Album

காேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங்குடியின மக்களின் குலதெய்வ திருவிழாகாேத்தர் பழங... மேலும் பார்க்க