டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
கரூர்: போக்ஸோவில் காவலர் கைது!
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.
கரூர் அடுத்த நெரூர் ரங்கநாதன் பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், காவலர் இளவரசனுக்கும் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாணவிக்கு காவலர் இளவரசன் அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து, காவலர் இளவரசனை சனிக்கிழமை அதிகாலை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இதையும் படிக்க:டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?