செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் மனு ஏற்பு

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில் 58 வேட்பாளா்கள் 65 மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதா லட்சுமியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது. முதல்நாளில் சுயேச்சைகள் பத்மராஜன், நூா்முகமது, மதுரைவிநாயகம் ஆகிய 3 பேரும், 13- ஆம் தேதி சேலம், தாதகாபட்டி ராஜசேகா், ஈரோடு 46 புதூா் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டம், சோழந்தூா் கஜினி முகமது என்ற பானை மணி, தருமபுரி ஆனந்த், ஈரோடு மரப்பாலம் முகமது கைபில், சென்னை இசக்கிமுத்து என 6 போ் மனுதாக்கல் செய்தனா். நூா்முகமது கூடுதலாக ஒரு வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இறுதி நாளான வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வரிசையில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி அமுதா ஆகியோா் மனுதாக்கல் செய்தனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி, அவருக்கு மாற்று வேட்பாளராக மேனகா ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். பின்னா் பதிவு பெற்ற கட்சிகள் சாா்பில் 49 வேட்பாளா்கள் 55 மனுக்களை தாக்கல் செய்தனா்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

3 நாள்களிலும் சோ்த்து 58 வேட்பாளா்கள் 65 மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதில் வி.சி.சந்திரகுமாா் 4, சீதாலட்சுமி 3, நூா்முகமது 2, அக்னி ஆழ்வாா் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 65 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை (ஜன 18) காலை 11 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 20- ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளா் இறுதி பட்டியல் சின்னத்துடன் அறிவிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னாட்டு புத்தகக் காட்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்!

பன்னாட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல... மேலும் பார்க்க

மதுரை, திருச்சியில் அமையும் டைடல் பூங்கா பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கு... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யு என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளுக்கு மேல் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ... மேலும் பார்க்க

மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக சட்டத்துறையின் 3ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை(ஜன.1... மேலும் பார்க்க

மரணத்திலிருந்து தப்பினோம்.. ஷேக் ஹசீனா பரபரப்புத் தகவல்

வெறும் 20 - 25 நிமிட இடைவெளி தாமதமாகியிருந்தாலும் கொல்லப்பட்டிருப்போம், மரணத்திலிருந்து தப்பிவந்தோம் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்திருக்கும் ஆடியோ ஒன்றை வங்கதேச அவாமி லீக் கட்சி த... மேலும் பார்க்க

கரூர்: போக்ஸோவில் காவலர் கைது!

கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்தனர். கரூர் அடுத்த நெரூர் ரங்கநாதன் பேட்டையைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு இன்ன... மேலும் பார்க்க