டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
'ரிங்கு சிங் உடன் எனது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை' - பிரியா சரோஜ் தந்தை சொல்வதென்ன?
2023 ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்த ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த நிலையில், அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியால் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டிருக்கிறார். மறுபக்கம், இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அடுத்த வாரம், இந்தியாவில் தொடங்கும் இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இவர் இடம் பிடித்திருக்கிறார்.
இதனிடையே ரிங்கு சிங்கிற்கும், வழக்கறிஞரும், எம்பியுமான பிரியா சரோஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்திருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. ஆனால் இருவரும் இதுதொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்நிலையில் எம்.பி பிரியா சரோஜின் தந்தை, தனது மகளுக்கும், ரிங்கு சிங்கிற்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும் ரிங்கு சிங்கின் பெற்றோர் தரப்பில் இருந்து ரிங்கு சிங்கிற்கு தங்களது பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் மட்டும் தெரிவித்திருந்தனர் என்றும் கூறியிருக்கிறார்.