BCCI: தொடர் தோல்வி எதிரொலி; குடும்பத்தினருடன் தங்குவதில் கட்டுப்பாடா? புதிய விதிகள் சொல்வதென்ன?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ சில விதிகளைக் கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
புதிய விதிகளின்படி, அணி வீரர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டுப் போட்டிகளின்போது, வீரர்களுடன் தங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
45 நாட்கள் நீளும் ஒரு வெளிநாட்டுப் பயணத்தில், இரண்டு வாரங்கள் மட்டுமே தங்கள் மனைவியுடன் வீரர்கள் தங்க அனுமதிக்கப்படும் வகையில் விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பி.சி.சி.ஐ உன்னிப்பாகக் கவனித்த விஷயங்களின் அடிப்படையிலேயே இந்த விதிகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், அணி வீரர்கள் பல குழுக்களாகப் பயணிப்பதனால் எல்லா வீரர்களுக்கும் இடையில் தேவையான பிணைப்பு இல்லை என பி.சி.சி.ஐ கருதுவதாகக் கூறப்படுகிறது.
ஒட்டு மொத்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் இரு இரவு விருந்துகளில் மட்டுமே அனைத்து வீரர்களும் பங்கேற்றுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
BCCI முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்!
"அரை தசாப்தத்துக்கும் மேலாக அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த இந்திய அணி, அதே வீரர்களுடன் திடீரென அதிகமாகத் திணறி வருகிறது. அணியை உறுதியாக வைத்துக்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போட்டி அல்லது பயிற்சி முடிந்த உடனேயே தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் வீரர்கள் கவனம் செலுத்தத் தொடங்குவது அதிகரித்திருக்கிறது" என பி.சி.சி.ஐ தரப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வீரர்கள் எப்போதும் பெரும் பரிவாரங்களைக் கூட்டிக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் வளம் வருகின்றனர். வீரர்கள் தனித்தனி ஹோட்டல்களில் தங்கிக்கொள்ளக் கோருகின்றனர். சிலர் தனிப்பட்ட சுற்றுலா பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்கின்றனர். இவர்களை அணியின் பிற வீரர்களுடன் காண்பது அரிதாகிவிட்டது" என்றும் கூறப்பட்டுள்ளது.
"பெர்த்தில் வெற்றி பெற்ற தினத்தைத் தவிர வேறெப்போதும் அணியினர் ஒன்றாக உணவருந்தவில்லை. வீரர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து நேரம் செலவிடுகின்றனர். தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூட தனது குழுவுடன் சென்றுவிடுகிறார்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையில் குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனால் நிர்வாகம் வீரர்கள் குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs