செய்திகள் :

டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!

post image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு மிகப் பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது. முதலாவதாக, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இந்திய அணி முழுமையாக இழந்தது. இதன் மூலம், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது மட்டுமில்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.

இதையும் படிக்க: ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா? உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள்: யுவராஜ் சிங்

பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்த இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

தொடர்ச்சியான டெஸ்ட் தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

இதையும் படிக்க: பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஷேன் வாட்சன்!

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நான்கு நாள்கள் நடைபெறும் மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாகவும், இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. வீரர்கள் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை அறிந்துகொள்ள இந்த போட்டிகள் உதவியாக இருக்கும். அதேபோல, சில மாதங்களுக்குப் பிறகு சிவப்புப் பந்தில் விளையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த போட்டிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 14-ல் தொடக்கம்!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை பிசிசிஐ இன்று (ஜனவரி 16) வெளியிட்டுள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஷேன் வாட்சன்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பதவிக்காலம் முடியும் முன்பு விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிர... மேலும் பார்க்க

ஃபார்முக்குத் திரும்ப வேண்டுமா? உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள்: யுவராஜ் சிங்

வீரர்கள் ஃபார்முக்குத் திரும்ப உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழு... மேலும் பார்க்க

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க குல்தீப் யாதவ் தீவிர பயிற்சி!

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவுக்கு, கடந்த ஆ... மேலும் பார்க்க

இலங்கை தொடர்: ஆஸி.க்கு கூடுதல் ஒருநாள் போட்டி சேர்ப்பு!

இலங்கை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதலாக ஒரு ஒருநாள் போட்டி சேர்க்கப்பட்டுதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்ற அதே வேட்கையுடன் இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அண... மேலும் பார்க்க