மகளிர் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 14-ல் தொடக்கம்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை பிசிசிஐ இன்று (ஜனவரி 16) வெளியிட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் முறையாக போட்டிகள் நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க: டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!
போட்டிகள் பரோடா, பெங்களூரு, மும்பை மற்றும் லக்னௌ ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளன. முதல் போட்டி பரோடாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பரோடா மற்றும் லக்னௌ இரண்டு நகரங்களிலும் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டு போட்டிகள் அனைத்தும் பெங்களூரு மற்றும் புது தில்லியில் நடைபெற்றன.
இந்த ஆண்டு இறுதிப்போட்டி மும்பையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.