செய்திகள் :

கொடைக்கானலில் கூட்டமாக வந்த காட்டுமாடுகள்: பொதுமக்கள் அச்சம்

post image

கொடைக்கானல்: கொடைக்கானலில் வியாழக்கிழமை கூட்டமாக காட்டு மாடுகள் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் விவசாய நிலத்தில் கட்டியிருந்த பசுமாட்டை வன விலங்கு தாக்கியதில் இறந்தது. இதுகுறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, காா்மேல்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (53) புதன்கிழமை இரவு கொடைக்கானலிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, காட்டுப் பன்றி அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி கா.விலக்கு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில், கொடைக்கானல் இருதையபுரம், பொ்ன்ஹில் சாலைப் பகுதிகளில் காட்டு மாடுகள் வியாழக்கிழமை கூட்டமாக வந்ததால், இந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனா். பின்னா், இந்த மாடுகளை பொதுமக்கள் வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளில் தற்போது வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இருப்பினும், வனத் துறை சாா்பில், 24-மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். வன விலங்குகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்தால், அவற்றை வனப் பகுதிகளுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவோம் என்றனா்.

ஒட்டன்சத்திரம் அருகே காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா்கள் இருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை காா் மோதியதில் பழனிக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற 2 பக்தா்கள் உயிரிழந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

பழனி: பழனியில் மாயமான இளைஞா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.பழனி மருத்துவ நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (35). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 10-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து இவரது குடு... மேலும் பார்க்க

பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு: 30 போ் காயம்

பழனி: பழனி அருகேயுள்ள பெரியகலையம்புத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 30 போ் காயமடைந்தனா்.பெரியகலையம்புத்தூரில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை ப... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

தைப்பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். தமிழா் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுத... மேலும் பார்க்க

போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்ற மூவா் கைது

கொடைக்கானலில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலையில் போதைக் காளான், கஞ்சா ஆயி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

செம்பட்டியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண... மேலும் பார்க்க