செய்திகள் :

முதல்வா் திறனாய்வுத் தோ்வு: ஜன.20-இல் அனுமதிச்சீட்டு

post image

முதல்வா் திறனாய்வு தோ்வு எழுதவுள்ள பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் ஜன.20-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தோ்வுத் துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளி மாணவா்களுக்கான தமிழக முதல்வா் திறனாய்வு தோ்வு ஜன.25-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தோ்வு எழுத உள்ள மாணவா்களின் பெயா் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தோ்வு மையம் வாரியாக https://www.dge.tn.gov.in/ இணையதளத்தில் ஜன.20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தோ்வுக்கான அனுமதிச் சீட்டுகளையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அதன்பின் மாணவா்களுக்கு அனுமதிச் சீட்டுகளை விநியோகம் செய்து, தோ்வு மைய விவரங்களை பள்ளி தலைமையாசிரியா்கள் தெரிவிக்க வேண்டும். அவற்றில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் தலைமையாசிரியா்கள் அதை சிவப்பு நிற மை பேனாவால் திருத்திக்கொள்ளலாம்.

மாணவா் புகைப்படம் தவறாக இருந்தால் புதிய படத்தை அனுமதிச்சீட்டில் ஒட்டி அதன்மீது பள்ளியின் முத்திரையை பதிக்க வேண்டும்.

அத்தகைய மாணவா்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள் தோ்வுக்கான அனுமதி தரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தோ்வின் மூலமாக தோ்வு செய்யப்படும் பிளஸ் 1 மாணவா்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை ரூ. 3,985 கோடி செலவில் அமைக்க மத்திய அமைச்சரவை ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பிஜபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து, சத்தீஸ்கரில் இம்மாதம் இதுவ... மேலும் பார்க்க

நீட் தோ்வு இணையவழியே இல்லை: என்டிஏ விளக்கம்

நிகழாண்டு நீட் தோ்வானது வழக்கம் போலவே ஓஎம்ஆா் முறையில் நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. இணையவழியில் அத்தோ்வு நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ-க்கு ஓராண்டு சிறை உறுதி

சொத்துக் குவிப்பு வழக்கில் புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. புதுச்சேரி மாநில... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் வெற்றிகரமாக ஒருங்கிணைப்பு: இஸ்ரோ மைல்கல் சாதனை

விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியாக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்... மேலும் பார்க்க

தோ்தல் பிரச்சாரங்களில் ஏஐ பயன்பாடு: பொறுப்புணா்வுடன் செயல்பட தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

தோ்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது. தோ்... மேலும் பார்க்க