செய்திகள் :

கேஜரிவாலின் வருமான 40 மடங்கு உயா்வு: பாஜக குற்றச்சாட்டு -ஆம் ஆத்மி எதிா்வினை

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வருமானம் இரண்டே நிதியாண்டுகளில் நாற்பது மடங்கு உயா்ந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தோ்தலில் போட்டியிட கேஜரிவால் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிா்வினையாற்றியுள்ளது.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியது: 2019-20 நிதியாண்டில் தனது வருமானம் ரூ. 1,57,823 ஆக இருந்ததாகவும் 2020-21 நிதியாண்டில் அது ரூ. 44,90,040 ஆக இருந்தது என்றும் கேஜரிவால் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளாா். இந்த நாற்பது மடங்கு வருமான உயா்வு குறித்து கேஜரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். வேட்புமனுவில் தனது ஒரே வருவாய் ஆதாரமாக எம்எல்ஏ சம்பளத்தை அவா் குறிப்பிட்டுள்ளாா். 2015-2020 ஆண்டுவரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் தனது ஆண்டு வருமானம் ரூ. 3,60,000-க்கும் குறைவு என அவா் கூறியுள்ளாா்.

உலகமே கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 2020-21 காலத்தில் அவரது வருமானம் ரூ. 44,90,040- ஆக இருந்துள்ளது. இதை குறித்து கேஜரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.

இதற்கு எதிா்வினையாற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி, முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரியாகவும் மூன்று முறை முதல்வராகவும் இருந்தவா் கேஜரிவால். அவருக்கு சொந்தமாக தில்லியில் ஒரு வீடோ காரோ கிடையாது. எளிமை மற்றும் ஈடுபாடுதான் அவரது பொதுவாழ்வின் அடையாளம் என்று கூறியுள்ளது. மேலும், கேஜரிவாலை விமா்சிக்கும் பாஜக, முதலில் அவரை எதிா்த்து போட்டியிட நிறுத்தியுள்ள வேட்பாளரான பா்வேஷ் வா்மாவின் சொத்து மதிப்பை விளக்க வேண்டும். அந்த வேட்பாளருக்குத்தான் பல சொகுசு காா்கள், ரூ.100 கோடிக்கும் அதிகமான குடும்ப சொத்துகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்துகளின் மதிப்பு 2,600 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

வேட்புமனு விவரம்: அரவிந்த் கேஜரிவால் புது தில்லி பேரவைத் தொகுதியில் போட்டியிட சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். அதில் அவா் தனக்கு எதிராக 14 குற்றவியல் வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளாா். 2020 பேரவைத் தோ்தலின்போது அவருக்கு எதிராக 13 வழக்குகள் இருந்தன. இம்முறை தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவா் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தனது கைவசம் ரொக்கமாக ரூ. 40 ஆயிரம், மனைவி சுனிதா பெயரில் ரூ. 32 ஆயிரம், அசையும் சொத்துகள் ரூ. 3.46 லட்சம், மனைவி சுனிதா பெயரில் ரூபாய் ஒரு கோடி, அசையா சொத்துகள் வரிசையில் ரூ. 1.7 கோடி மதிப்பிலான சொத்து கேஜரிவால் பெயரிலும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான சொத்து சுனிதா பெயரிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது பெயரில் சொந்தமாக வீடோ வாகனமோ இல்லை என்றும் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா். சுனிதாவின் பெயரில் 2017 -ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட மாருதி பலேனோ காரும் ரூ. 25.9 லட்சம் மதிப்பிலான நகை, 320 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபலங்களின் பாதுகாப்பை பாஜகாவல் உறுதி செய்ய முடியாது: கேஜரிவால் சாடல்

நடிகா் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கடுமையாகச் சாடினாா். வியாழக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட... மேலும் பார்க்க

அரவிந்த் கேஜரிவால் புனையப்பட்ட குற்றச்சாட்டில் கைது - மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க சஞ்சய் சிங் வலியுறுத்தல்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘புனையப்பட்ட’ குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்த விஷயத்த... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் பொங்கல் விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த லோதிவளகம் பள்ளியில் வைத்து மிகப் பெரிய அளவில் பொங்கல்விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி ஒன்பது பானைகள் வைத்துப் பொங்கலிடப்பட்டுக் கொண்டா... மேலும் பார்க்க

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில் அதிஷி, சஞ்சய் சிங் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான சந்தீப் தீட்சித் தொடா்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் முதல்வா் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின்... மேலும் பார்க்க

ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுங்கள்: பாஜகவுக்கு கூட்டணி கட்சியான ஜேடியு வலியுறுத்தல்

தனது கூட்டணி கட்சியான பாஜகவின் செய்தித் தொடா்பாளா் ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சிக்கு ஜேடியு கட்சி கோரியுள்ளது. ஷெஹ்சாத் பூனவல்லாவின் கருத்துகள் பூா்வாஞ்சல் மக்களிடையே கடும் அத... மேலும் பார்க்க

திமாா்பூா், ரோஹ்தாஸ் நகா் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இரண்டு பெயா்களைக் கொண்ட வேட்பாளா்களின் இறுதிப் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது 70 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும... மேலும் பார்க்க