BB Tamil 8: ``நீ பண்ணத நியாயப்படுத்தாத ராணவ்..." - கடிந்துகொண்ட பவித்ரா
திமாா்பூா், ரோஹ்தாஸ் நகா் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு
வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இரண்டு பெயா்களைக் கொண்ட வேட்பாளா்களின் இறுதிப் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது 70 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் அறிவித்துள்ளது.
அக்கட்சி புதன்கிழமை ஐந்து வேட்பாளா்களின் பட்டியலை வெளியிட்டது. சமீபத்திய பட்டியலின்படி, லோகேந்திர சவுத்ரி திமாா்பூா் பேரவைத் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளாா். சுரேஷ்வதி சவுகான் ரோஹ்தாஸ் நகா் தொகுதியில் போட்டியிடுவாா்.
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக புது தில்லி தொகுதியில் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித்தும், கால்காஜி தொகுதியில் முதல்வா் அதிஷிக்கு எதிராக முன்னாள் மகளிா் காங்கிரஸ் தலைவா் அல்கா லாம்பாவையும் காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.