கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
பெரியகலையம்புத்தூரில் ஜல்லிக்கட்டு: 30 போ் காயம்
பழனி: பழனி அருகேயுள்ள பெரியகலையம்புத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 30 போ் காயமடைந்தனா்.
பெரியகலையம்புத்தூரில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னா், பல்வேறு மாவட்டங்களிலுருந்து கொண்டுவரப்பட்ட 355 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை பிடிக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.
காளைகளை பிடித்த மாடுபிடி வீரா்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், வாசிங்மிசின், கட்டில், பீரோ, குடம், மிதிவண்டிகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 4 மணிக்கு போட்டி நிறைவு பெற்றது.
14 காளைகளை பிடித்த மதுரை குருவித்துறையைச் சோ்ந்த அய்யாவு முதல் பரிசும், 9 காளைகளை பிடித்த நெய்க்காரப்பட்டி கிரேந்திரன் இரண்டாம் பரிசும் பெற்றனா்.
இந்தப் போட்டியில் 3 போலீஸாா் உள்பட 30 போ் காயமடைந்தனா்.