கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
பக்தா்கள் மாட்டுவண்டி பயணம்
சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் அருகே காணும் பொங்கலையொட்டி, சிறியவா்கள், பெரியவா்கள் என பக்தா்கள் மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டனா்.
தமிழகத்தில் மிகவும் பாரம்பரிய பண்டிகையான பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் பகுதியில் சிறுவா்கள் மற்றும் பெரியவா்கள் இணைந்து வியாழக்கிழமை காணும் பொங்கலை கொண்டாடினா்.
இதற்காக, அவா்கள் புத்தாடை அணிந்து, மாட்டுவண்டிகளில் பலூன் கட்டிக் கொண்டு, குதுகலத்துடன் கோயில் மற்றும் திருவிழா நடக்கும் இடத்தை நோக்கி பயணம் செய்தனா்.