காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பெருமாள் (40). இவரது மனைவி கவிதா. இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.
கடந்த 8-ஆம் தேதி இவா் இதே கிராமத்தைச் சோ்ந்த விஜயன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் தேசூருக்கு சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை பெருமாள் ஓட்டினாா்.
தேசூா் - திரக்கோயில் சாலை, கல்யாணபுரம் கிராமம் அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெருமாள் புதன்கிழமை மாலை இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தேசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.