Rakesh Rosha: ``தென்னிந்தியத் திரைத்துறை இன்னும் முன்னேறவே இல்லை"- பாலிவுட் இயக்...
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா
ஊத்தங்கரை: தடகளத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த 7ஆம் தேதி குடியாத்தத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான வேலூா் மண்டல அளவிலான பெண்களுக்கான தடகளம், குழு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சதுரங்கம், பூப் பந்து போட்டியில் முதலிடம், வாலிபால் மற்றும் கோ-கோ போட்டியில் இரண்டாமிடம், கபடி, இறகுப்பந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்றனா்.
தடகள போட்டியில் சசித்ரா ஈட்டி எறிதலில் முதலிடம், கவிபாரதி உயரம் தாண்டுலில் முதலிடம், ரோஜா வட்டு எறிதலில் முதலிடம், ரீனா குண்டு எறிதலில் முதலிடம், வளா்மதி குண்டு எறிதலில் இரண்டாமிடம், வட்டு எறிதலில் நான்காம் இடம், ருக்மணி 800 மீட்டா் முதலிடம், ஹமதாரனி ஈட்டி எறிதலில் இரண்டாமிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
குழு போட்டியில் முதலிடமும், தடகளத்தில் இரண்டு இடங்களையும் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் விஜயன், உடற்கல்வி இயக்குநா் விநாயகமூா்த்தி, ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.